Header Ads



மகிந்தவுக்கு வந்த கோபம்

கூட்டு எதிர்ககட்சி நேற்று நியமித்த நிழல் அமைச்சரவை சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோபத்திலும் மன கவலையிலும் இருப்பதாக தெரியவருகிறது.

நிழல் அமைச்சரவை அமைக்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும முன்னின்று செயற்பட்டுள்ளதுடன் மகிந்த ராஜபக்சவிற்கு இது குறித்து தெளிவுப்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வினவியே மகிந்த இது பற்றி அறிந்து கொண்டுள்ளார்.

நிழல் அமைச்சரவையில் தன்னை பிரதமராகவும் புத்தசாசனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளமை கேட்டு கடும் கோபம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி, தன்னை முன்னாள் பிரதமரான டி.எம். ஜயரத்னவின் நிலைமைக்கு தள்ளியுள்ளதாக கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்சவை நிழல் வெளிவிவகார அமைச்சராக நியமித்திருப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் பதவியை வகிக்கும் அளவுக்கு அவர் அனுபவமிக்கவர் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

நிழல் அமைச்சரவையின் பிரதமராக தெரிவு செய்தன் மூலம் தன்னை கோமாளியாக்கியுள்ளதுடன் அசௌகரியத்திற்கும் உள்ளாகியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.