Header Ads



சாரதி உயிரிழந்தால் 5 இலட்சம், பயணி உயிரிழந்தால் 1 இலட்சம் - புதிய திட்டம் அறிமுகம்


முச்சக்கர வண்டி விபத்தின் போது உயிரிழக்கும் முச்சக்கரவண்டி சாரதிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகையாக 5 இலட்சம் ரூபாவும், பயணிகளுக்கு தலா ஒவ்வொரு இலட்சம் ரூபாவும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். 

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் முச்சக்கரவண்டி விபத்துக்களில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்துக்களில் முச்சக்கரவண்டி சாரதிகளை விட, அதில் பயணிக்கும் பயணிகளே அதிகளவு உயிரிழக்கின்றனர். இந்நிலையில் முதல் கட்டமாக மேல் மாகாண சபையுடன் இணைந்து இந்த திட்டத்தை அமுல்படுத்தப்படவுள்ளதோடு தற்போது மேல் மாகாணத்திலுள்ள முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளின் விபத்தில்  சாரதி உயிரிழந்தால் ஐந்து இலட்சம் ரூபாவும்  முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பயணிகள் உயிரிழந்தால்  மூன்று பயணிகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாவும் வழங்கப்படும்.  இந்த திட்டத்தை அடுத்த மாதம் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.