முட்டை ஓடு இல்லாமல், கோழிக்குஞ்சு பொரியும் (Video)
முட்டைக் கருவில் இருந்து கோழிக்குஞ்சுகள் உருவாவதற்கு ஓடு மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழிக் குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலங்காலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிபா எனும் பாடசாலையின் உயிரியல் பிரிவு மாணவிகள் பொய்யாக்கியிருக்கிறார்கள்.
கோழி முட்டைகளை அடைகாக்க வைப்பது என்பது இன்று கிராமங்களில் கூட வழக்கொழிந்து வருகிறது.
கோழி வளர்ப்பவர்கள் கூட பெரும்பாலும் இன்குபேட்டரில் பொரிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளை வாங்கித்தான் வளர்க்கிறார்கள். இதற்குக் காரணம், முட்டையைப் பாதுகாப்பாக வைத்து, உடையாமல் கோழியை அடைகாக்கவைப்பது என்பது தேவையில்லாத வேலை என்று கருதுகிறார்கள்.
பலரும் நாட்டுக்கோழியை விடுத்து பிராய்லர் கோழியை விரும்பி உண்கின்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிபா அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவர்கள் புதிய முயற்சியின் மூலம் பாரம்பரியமான கோழி அடைகாக்கும் முறை தேவையற்றது என நிரூபித்திருக்கிறார்கள்.
ஒரு சாதாரண பிளாஸ்டிக் உறையை எடுத்து, அதை ஒரு கூம்பு வடிவிலான பொருளின் மீது வைத்து உறையின் அடர்த்தியை குறைத்து, அதை இழுத்துப் பெரிதாக்கி, அதனுள் முட்டையை உடைத்து ஊற்றி அதனை பொரிப்பானில் (இன்குபேட்டரில்) வைக்கின்றனர்.
அதனுள், முட்டையின் மஞ்சள் கருவில் சிறு துணுக்காகத் தோன்றும் உயிரணு மூன்றே நாட்களில் இதயமாகவும், அடுத்த 21 நாட்களில் முழு உடல் வளர்ச்சியுடன் முடி, இறக்கை போன்றவையும் வளரப்பெற்ற கோழிக்குஞ்சாக நடைபோடுகிறது.
காணொளியில் காண்க… https://www.youtube.com/watch?v=am3iGHDnJHc

Post a Comment