Header Ads



நோன்பினால் உடல்நல பாதிப்பா? பெல்ஜிய TV க்கு தர்மலிங்கம் கலையரசனின் பதில்

-Tharmalingam Kalaiyarasan-

பெல்ஜியத்தில், பாடசாலை செல்லும் முஸ்லிம் சிறார்கள் ரமழான் நோன்பு பிடிப்பதால், ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் குறித்து, பெல்ஜிய தொலைக்காட்சியில் ஆய்வு செய்தார்கள்.

சிறுவர்கள் நோன்பு இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பல மாணவர்கள் பெற்றோருக்கும் தெரியாமலே இதைச் செய்கிறார்கள். கூடப் படிப்பவர்கள் பரிகசிப்பார்கள் என்பதாலும் நோன்பு பிடிக்கிறார்கள். இதனால் சோர்வுற்றுக் காணப்படும் சிறுவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகின்றது என்று கூறினார்கள்.

நோன்பு பிடிப்பதால் சாப்பிடாமல் இருக்கும், பிள்ளைகளின் உடல்நலம் குறித்து கவலைப் படும், பெல்ஜிய தொலைக்காட்சிக்கு ஒரு வேண்டுகோள். உங்களது நாட்டில் ஐந்தில் ஒரு பிள்ளை (18%) வறுமையில் வாடுவதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.

ஏழைக் குடும்பத்து பிள்ளைகள், பிறந்தநாள் கொண்டாடுவதில்லை, புதிய உடை உடுத்துவதில்லை. அது மட்டுமல்ல, சாப்பிடாமல் அரைப் பட்டினியாக பாடசாலைக்கு சென்று வருகிறார்கள். பெல்ஜியத்தில் வாழும் ஏழைச் சிறுவர்கள் பற்றியும் ஆய்வு செய்து காட்டி இருக்கலாமே?

நோன்பு பிடிக்கும் முஸ்லிம் சிறுவர்கள் மத நம்பிக்கை என்ற காரணத்தால் சாப்பிடாமல் இருக்கிறார்கள். ஆனால், ஏழைச் சிறுவர்கள் பணமில்லாத காரணத்தினால் சாப்பிடாமல் இருக்கிறார்கள். இது ஒரு "பணக்கார மேற்கத்திய நாடான" பெல்ஜியத்திற்கு அவமானம் இல்லையா?

1 comment:

  1. உண்மை உரைத்தீர்கள் சகோ

    ReplyDelete

Powered by Blogger.