Header Ads



IS பயங்கரவாதிகள் அறிவித்த கிலாபத் முடிவுக்கு வருகிறது - ஈராக்கை மூன்றாக பிரிக்க வலியுறுத்து

இஸ்லாமிய தேசம் குழு (ஐ.எஸ்.) வீழ்த்தப்பட்ட பின் மேலும் மத வன்முறைகள் ஏற்படாமல் இருக்க ஈராக் ஷியா, சுன்னி மற்றும் குர்திஷ்களுக்காக வெவ்வேறு மூன்று நிர்வாகங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்று முன்னணி குர்திஷ் அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெறி வந்த ஐ.எஸ். குழுவை ஈராக் படையினர் முக்கிய நகரங்களில் இருந்து பின்வாங்கச் செய்துள்ளனர். படையினர் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய நகரான மொசூலை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளனர். மொசூல் வீழ்த்தப்படும் பட்சத்தில் ஈராக்கில் ஐ.எஸ். சுயமாக அறிவித்த கலீபத் முடிவுக்கு வரும்.

ஐ.எஸ். வீழ்த்தப்பட்டபோதும் ஈராக்கில் மத வன்முறைகள் நீடிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஈராக் குர்திஷ் பிராந்திய அரசின் தலைவர் மசுத் பர்சானியின் மகனும் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு கவுன்ஸில் தலைவருமான மஸ்ரூர் பர்சானி, தொடர்ந்தும் தம்மால் ஒரே கூரையின் கீழ் இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

“கூட்டரசு முறை வெற்றி அளிக்கவில்லை. எனவே சமஷ்டி முறை அல்லது முழுமையாக பிரிந்து செல்ல வேண்டும்” என்று பர்ஸானி ரொய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார். “மூன்று சமஷ்டி தேசங்களுடன், ஒன்றை ஒன்று மிஞ்சாத மூன்று தலைநகரங்கள் இருக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈராக்கில் சுதந்திர நாடொன்றை ஏற்படுத்தும் குர்திஷ்களின் நீண்ட கால கனவை நிறைவேற்ற அவர்கள் ஏற்கனவே ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். 2003 அமெரிக்க படையெடுப்பில் சதாம் ஹுசைன் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் குர்திஷ்கள் நாட்டின் வடக்கில் சுயமான நிர்வாகம் மற்றும் சொந்த இராணுவத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பஷ்மார்க் குர்ஷ் படையினர் அமெரிக்காவின் உதவியோடு ஐ.எஸ். குழுவுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

சுன்னி முஸ்லிம்களுக்கும் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடக்கு மற்றும் மேற்கில் இதேபோன்ற நிர்வாக அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்று பர்சானி வலியுறுத்தியுள்ளார். 

1 comment:

  1. I hope Kurds also Sunnis !

    The final outcome of ISIS project by US, ISRAEL and its new ally IRAN to devide IRAQ and weaken the strenght of SUNNIS in the region

    May Allah Guide and Protect us from their evil plots.

    ReplyDelete

Powered by Blogger.