IS தீவிரவதம் குறித்து இலங்கை, கவனம் செலுத்துவது போதாது - அமெரிக்கா
புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதிலேயே சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்துவதால், ஐஎஸ் தீவிரவாதம் போன்ற புதிய அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துவது பாதிக்கப்படுவதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, 2015ஆம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான அறிக்கையிலேயே அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதில் சிறிலங்கா பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றதானது, இலங்கையர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பாக கவனம் செலுத்துவதை பாதித்துள்ளது.
அதேவேளை விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இன்னமும் உயிர்ப்புடன் செயற்பட்டு வருகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம், பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுடன் சிறிலங்கா ஒத்துழைத்து வருகிறது எனினும், தீவிரவாத முறியடிப்பு உதவிகள் சிறிலங்காவுக்கு கடந்த ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்பட்டன.
அமெரிக்க கடலோரக் காவல்படை, சிறிலங்கா கடற்படைக்கு கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை அளிக்கிறது. என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Now we can understand who's funding for bodubalasena and ganasera
ReplyDeleteNow we can understand who's funding for bodubalasena and ganasera
ReplyDeleteஅரசாங்கத்தின் கவனத்தை முஸ்லிம்களின் பக்கம் திசை திருப்பி இனக்குழுக்களை உண்டு பண்ணி இருதரப்புக்கும் ஆயுதங்கள் விற்று அதில் இலாபமடையும் தூர நோக்கத்தோடு விடும் அறிக்கைதான் இது இதர்க்கு ஒத்தாசையாக தற்போது இலங்கையில் இயங்கும் இஸ்ரவேல் தூதரகம் ,இதில்உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம் நம் நாட்டின் உழவுத்துறை மிகத்துல்லியமாக யாருக்கும் தலைசாய்க்காமல்நாட்டின் எதிர்கால நலம் கருதி அக்குவேறு ஓணிவேறாக பிரித்தறிந்து இலங்கையில் முஸ்லிம் தீவரவாதம் இல்லை என்ற உண்மையை மேற்கத்திய குரோத நாடுகளுக்கு கன்னத்தில் அறைந்தாப்போல் சொல்லி இலங்கையில் இனக்கலவரம் ஏற்படுவதை தடுத்து வருகிறார்கள்
ReplyDelete