Header Ads



ஹீரோவானார் மைத்திரி - எதற்காக இந்த அங்கிகாரம்..?

-நஜீப் பின் கபூர்-

ஜப்பானில் நடைபெற்ற பலம் வாய்ந்த ஜீ-7 உச்சி மா நாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொண்டது நமது நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைத்த மிகப் பெரிய அங்கிகாரம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.

கூட்டு எதிர்க் கட்சியைச் சேர்ந்த சிலரும் முன்னாள் ஜனாதிபதியின் ஒரு சில கையாட்களும் இந்த இராஜதந்திர அங்கிகாரத்தை வஞ்சகக் கண்ணோட்டத்தில் இன்று கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்து கொண்டிருப்பது, இது விடயத்தில் அவர்களுக்குள்ள வயிற்றெரிச்சலின் வெளிப்பாடேயன்றி வேறொன்றும் கிடையாது என்பது எமது கருத்தாகும்.

நமது நாட்டுத் தலைவர் ஒருவருக்கு இந்த உச்சி மா நாட்டுக்கு அழைப்புக் கிடைத்தது இதுதான் முதல் முறை! நமது நாட்டுத் தலைவருக்கு கிடைத்த இந்த அழைப்பை ஆசிய நாடுகள் மற்றுமன்றி உலக நாடுகளும் மிகவும் ஆர்வத்துடன் அவதானித்துக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மா நாட்டுக்கு நமது தலைவர் போய் ஜப்பான் விமான நிலையத்தில் இறங்கிய போது அங்கு ஒரு அசாதாரண நிலை தோன்றியது. அது பற்றியும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி இருக்கின்றது. இலங்கை ஜனாதிபதி சாதாரண குடிமக்கள் பயணிக்கின்ற விமானத்தில் போய் அங்கு இறங்கியதால் அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்குவதில் ஜப்பான் அதிகாரிகளுக்கு நெருக்கடி நிலை தோன்றியது. 

விமானத்தில் இருந்து இறங்கும் சாதாரண பிரசைகளும் இந்த செங்கம்பலத்தைப் பாவிக்கும் நிலை என்பதால் அதற்கு மாற்று ஏற்பாடாக அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிக்கு மட்டும் உபயோகிக்கக் கூடியதாக அந்த செங்கம்பலத்தின் நடை பாதையை மாற்றி அமைத்துக் கொடுத்தது அங்கு பார்க்கக் கூடிய சிறப்பம்சமாக இருந்தது.

இலங்கை ஜனாதிபதியின் ஜீ-7 மா நாட்டு விஜயத்தை சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 2016 ஜீ-7 உச்சி மா நாடு இலங்கை அதிபரை ஒரு ஹீரோவாகவே சித்தரித்துக் காட்டிக் கொண்டிருந்தது.
பெரும் பொருளாதார ஜம்பவான்களான ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானிய, பிரான்ஸ்;, ஜேர்மன், கனடா, இத்தாலி, ஜப்பான் என்ற நாடுகளே இந்த ஜீ-7 மா நாட்டின் உறுப்பு நாடுகளாகும்.

இந்த செல்வாக்கு மிக்க நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இலங்கை ஜனாதிபதியை மிகவும் நேசத்துடனும் ஆர்வத்துடனும் நெருங்குவதில் மிகுந்த அக்கரை எடுத்துக் கொண்டார்கள் என்பதனை, மா நாட்டு நிகழ்வுகளின் போது பரவலாக அவதானிக்க முடிந்தது. குறிப்பாக மா பெரும் உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரி அமர்ந்திருந்த ஆசனம் அருகில் தேடி வந்து அவருக்கு ஒரு மூத்த தலைவருக்குக் கொடுக்கின்ற ஒரு மரியாதையை  மா நாடு பூராவிலும் வழங்கிக் கொண்டிருந்தனர்.

நமது அரசியல் வரலாற்றில் நமது நாட்டுத் தலைவர் ஒருவருக்கு இந்த வகையில் ஒரு மரியாதை கிடைத்தது இதுதான் முதல் முறை என்பது எமது கணிப்பாகும். இது ஏறக்குறைய அண்மைக் காலங்களில் நெல்சன் மண்டேலா, மற்றும் பிடல் கஸ்ரோ போன்றவர்களுக்கு உலகத் தலைவர்கள் கொடுக்கின்ற ஒரு அந்தஷ்த்துக்கு ஒப்பான ஒரு மரியாதை என்று நாம் குறிப்பிட்டால் அது தவறாக அமைய மாட்டாது.

இப்படியாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிக்கு உலகத் தலைவர்கள் ஏன் இந்தளவு கௌரவம் கொடுத்தார்கள் என்பது பற்றி நாம் அறிந்த வரை எந்த ஒரு ஊடகமும் பேசவில்லை நோக்கவில்லை என்றே கூறவேண்டும். எனவே இது பற்றி நாம் சற்றுப் பார்க்கலாம் என்று சிந்திக்கின்றோம். 

இன்றுள்ள உலகத் தலைவர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கின்ற போது நமது ஜனாதிபதி மைத்திரி ஒரு மூத்த அரசியல் தலைவர் அல்ல. இப்போதுதான் முதல் முறையாக அவர் பதவிக்கு வந்திருக்கின்றார். அவர் இதுவரை நாட்டுக்கோ சர்வதேசத்துக்கோ ஏதும் பெரிதாகச் சாதித்துக் காட்டி இருக்கின்றார் என்றும் குறிப்பிடுவதற்கில்லை! அப்படியானால் ஜீ-7 ஜப்பான் உச்சி மா நாடு மைத்திரியை ஹீரோவாகப் பார்ப்பதற்கான காரணங்கள்தான் என்ன?

1.வன்முறையான ஆட்சி: போருக்குப் பின் இந்த நாட்டில் ஒரு அடாவடித்தன நிலையை ஆட்சியாளர்களே உருவாக்கி இருந்தனர். அந்த  வன்முறையான ஆட்சிக்கு முடிவு கட்டிய ஹீரோ என்று மைத்திரியை இன்று சர்வதேச சமூகம் கணக்குப் போட்டுப் பார்க்கின்றது. அந்த மதிப்பீடு காரணமாக முதல் பிளஷ் பொயிண்டை உலக நாடுகள் மைத்திரிக்கு வழங்குகின்றது.!
2.அரசியல் தீர்வு: இலங்கையில் பல தசாப்தங்களாக இருந்து வருகின்ற  அரசியல் நெருக்கடிக்கு ஒரு நியாயமான தீர்வை இவர் தலைமையிலான அரசு வழங்கக் கூடும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் சர்வதேச சமூகம் இருந்து வருகின்றது. அந்த வகையில்  இலங்கை அரசியல் நெருக்கடிகளை தீர்க்கக் கூடிய ஒரு தலைவராக மைத்திரியை உலகம் பார்க்கின்றது!
3.சிறுபான்மை பாதுகாப்பு: போர் வெற்றியுடன் இனவாதிகளை கட்டாக்காளி நாய்களைப் போல் தெருவில் இறக்கிவிட்டு சிறுபான்மை சமூகங்களை ஆட்சியாளர்கள் அச்சுறுத்திக் கொண்டிருந்த நேரத்தில்  இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களை அரவணைத்து நாட்டை வழிநடாத்தக் கூடிய ஒரு தலைவராக பதவிக்கு வந்து அமர்ந்தவர் என்று இந்த மைத்திரி பார்க்கப்படுகின்றார்.
4.இணங்கிப்போகும் தலைவர்: மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிகாலத்தில் இறுதிப்பகுதியில் சர்வதேசத்துடன் முட்டிமோதி சண்டித்தனம் பண்ணுகின்ற ஒரு வன்முறைத் தலைவரைப்போல் காரியம் பார்த்து வந்தார். இதனால் இவர் விடயத்தில் அந்த நாடுகள் மிகுந்த அதிருப்தியில் இருந்து வந்தது. ஆனால் மைத்திரி சர்வதேசத்துடன் இணங்கிப்போகக் கூடிய ஒரு நல்ல தலைவர் என்று உலகம் இப்போது மைத்திரியைப் பார்க்கின்றது.
5.தனிப்பட்ட வாழ்வு: மேலும் இலங்கை அதிபர் மைத்திரி தனது தனிப்பட்ட வாழ்வில் மிகவும் எளிய வாழ்க்கையை  பின்பற்றுகின்ற மென்மையான ஒரு மனிதனாக இருப்பது  அவருக்கு சர்வதேச தலைவர்கள் அதிகூடிய கௌரவம் கொடுக்க முக்கிய காரணங்களாக இருக்கக் கூடும் என்பது எமது கணிப்பு!

எனவே ஒட்டுமொத்தமாக மைத்திரி மீதுள்ள நல்லெண்ணம்தான் அவருக்குள்ள இந்த அங்கிகாரம்! தனக்கு சர்வதேசத் தலைவர்கள் வழங்குகின்ற இந்த அங்கிகாரத்தை அவர் எப்படித் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளப்போகின்றார் என்பது ஜனாதிபதி மைத்திரியின் அரசியல் நகர்வுகளைப் பொறுத்த விவகாரமாக இருக்கும் என்பது எமது கருத்தாகும்.

3 comments:

  1. Wherever you go, there is good, and there is evil. I would say, in my entire life, I never known a politician like Justin and a nation like Canada.

    Check this out (or google 'The Daily Show - Prime Minister Justin Trudeau Welcomes Syrian Refugees to Canada')

    https://www.youtube.com/watch?v=9gT-vJg-EfM

    This program believed to be scripted like almost all of the programs like this but the message is pretty clear anyways.

    ReplyDelete
  2. Became Hero My3 and becomes Zero MR.

    ReplyDelete
  3. yes he is real hero he never wish proud he doesn't like to waste people money it is huge example for the world. Long life to our hero president

    ReplyDelete

Powered by Blogger.