Header Ads



பொலிஸ் நிதி மோசடி பிரிவினரின், விசாரணைகள் தொடர்பில் ரணில் வழங்கிய விளக்கம்

ஊழல்களை வெளியிடும் வேலைத்திட்டமும், சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று -08- நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் 44 விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நடத்தும் விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குற்றங்கள் மற்றும் ஊழல்களை பார்க்கும் போது அவற்றை விசாரணை செய்யக் கூடிய பயிற்சி பெற்ற அதிகாரிகள் இருக்கவில்லை. இதனால், முதல் கட்ட அதிகாரிகள் குழுவுக்கு பயிற்சியளிக்க காலதாமதமானது.

இரண்டாவது அதிகாரிகள் குழுவிற்கு இலங்கையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பயிற்சி பெற்ற அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 44 விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன. விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் அதனை மீண்டும் ஆராய்ந்து சட்டத்தை செயற்படுத்த வேண்டும். சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தற்போது 6 வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.

மீதமுள்ள விசாரணை அறிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்ன பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பர்.

சில விசாரணைகளில் புதிய விடயங்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளில் மேலும் தகவல்கள் தெரியவரலாம்.

பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிக்கப்படும் என பிரதமர் பதிலளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.