Header Ads



மரத் துண்டுகளில் குர்ஆனை, மனனம் செய்யும் ஆப்ரிக்கர்


ஆப்ரிக்காவில் உள்ள இந்த குழந்தைகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால் மரத் துண்டுகளில் குர்ஆன் வசனங்களை எழுதி மனனம் செய்கின்றனர். அதற்கேற்ற சூழலை இந்த குழந்தைகளின் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். குர்ஆன் மனனம் செய்தே ஆக வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. அதனை சரிசெய்ய முதலில் முயற்சிக்க வேண்டும். 

நபிகள் நாயகம் காலத்தில் அவரது தோழர்கள் முறை வைத்து இஸ்லாத்தை கற்றார்கள். ஒருவர் வேலைக்கு போவார். மறுநாள் அவர் இஸ்லாத்தை கற்பார். பாடம் பயின்றவர்கள் வேலைக்கு போனவருக்கு ட்யூஷன் எடுப்பார்கள். இதனால்தான் அவர்கள் கவுரமாக வாழ்ந்து மரணித்தார்கள். நபிகள் நாயகமும் தங்களுடைய வருமானத்துக்காக 100 ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை வைத்திருந்தார்கள். எவரிடமும் கையேந்தியதில்லை. 

எனவே இதன் மூலம் அறிவது அந்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கையை பாராட்டுவோம். அதேநேரம் அந்த சிறுவர்கள் உலக கல்வியையும் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். மாறிவரும் அறிவியல் உலகுக்கு ஏற்ப இஸ்லாமியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது தமிழகத்தில் உள்ள மதரஸாக்களில் நவீன கல்வியையும் புகுத்த வேண்டும். ஏழு வருடம் படித்து வெளியேறும் மாணவன் உலக சவால்களுக்கு ஈடு கொடுக்கக் கூடியவனாக வெளியேற வேண்டும். தற்போதுள்ள மதரஸா கல்வி முறை புரோகிதர்களைத்தான் உருவாக்குகிறது. கணிணி அறிவும் இல்லை: ஆங்கில அறிவும் இல்லை: உலக அறிவும் இல்லை: இப்படித்தான் அனேக மாணவர்கள் பட்டம் கொடுத்து வெளியேற்றப்படுகிறார்கள். முடிவில் அவர்கள் இமாமாகவோ மோதினாகவோ ஃபாத்திஹா ஓதும் முல்லாவாகவோ மாறி விடுகின்றனர். நபிகள் நாயகம் காட்டித்தந்த இஸ்லாம் இதுவல்ல. இதனை நம் சமூகம் என்று உணருகிறதோ அன்று தான் இஸ்லாமியர் உண்மை முஸ்லிம்களாக வாழ முடியும்.

-சுவனப் பிரியன்-

4 comments:

  1. Y THAMILAGAM SRILANKA VILIUM THALAPAI MADARASAKAL VITTU ODUM MANAVARGAL ADIGAM MANA NOIE ANA MANAVARGAL 7vardam mudithu islathil illatha visayngal islam enru adam

    ReplyDelete
  2. Iwarudaya katturayei parthaal oru yahoodi muslimukku wali kaattuwazu pol irukku !!

    ReplyDelete
  3. சுவனப் பிரியர் என்று பெயரைவைத்துக் ெகாண்டு நரகத்திட்கு வழி காட்டும் கட்டுரை எழுதியிருக்கரார் இவர். இது மாதிரியான இஸ்லாமிய அறிவே இல்லாமல் எழுதக்கூடிய கட்ரைகளை ஜப்னா முஸ்லிம் பரசுரிப்பதன் மூலம் உங்களது தரமும் கேள்விக்குறியாகின்றது.
    உலகத்தில் உள்ள அறிவுகளில் ஆகபெரிய அறிவு அல் குர்ஆன் ஹதீஸ் உடைய அறிவாகும் இதை ஏற்காதவன் முஸ்லிமாக முடியாது. இன்று பல வழிகளிலும் சமூகத்திற்கு வழி காட்டக்கூடிய உழமாக்க ளை உறுவாக்கியது இம் மதரசாக்களே..

    ReplyDelete
  4. தற்போது உள்ள மதராஸா கல்வி முறை புரோகிதர்களைத்தான் உருவாக்குகிறது என்கிற வார்த்தை சத்தியத்திற்கு புறம்பானது மதரஸாக்களில் எப்போது எந்த கல்வி வைக்கப்படவேண்டும் என்பது உலமாக்களுக்கு தெரியும். நபிகள் நாயகம் காட்டித்தந்த இஸ்லாம் எது என்பைத தாங்கள் சொல்ல வேண்டியதில்லை

    ReplyDelete

Powered by Blogger.