Header Ads



குவைத்தில் இலங்கையர்கள் சாதனை (பலகத்துறை, வரக்காபொல மாணவர்கள் அபாரம்) படங்கள்

-ஹரீஸ் ஸாலிஹ்-

2015-2016 ஆம் கல்வியாண்டுக்கான  குவைத் பல்கலைக்கழக அனுமதி உயர்தரப்  பரீட்சையில் இம்முறை அதி கூடிய புள்ளிகளை பெற்று இலங்கை மாணவர்கள் சாதனை படைத்து தனது தாய் நாட்டுக்கும் ,குவைத் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் .குவைத்தில் படிக்கும் இலங்கை மாணவர்கள் இதுவரை பெற்றுக்கொண்ட அதி கூடிய புள்ளிகள்  இதுவாகும்

குவைத் குர்துபா இஸ்லாமிய கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களான நீர்கொழும்பு பலகத்துறையைச் சேர்ந்த  முஹம்மத் ஸஜாத் ஷம்சுல் ஆப்தீன் (வலது) 98.98% புள்ளிகளைப் பெற்று குவைத்தில்  5 ஆவது இடத்தையும்  வரக்காபொல  யைச் சேர்ந்த  யமானி ஜுனைத் முஹம்மத் அக்ரம் (இடது ) 98.30% புள்ளிகளைப் பெற்று குவைத்தில் 7 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட மாணவ நட்சத்திரங்களாவர். இவர்களை கௌரவத்துக்குரிய கல்வி உயர் கல்வி அமைச்சர் கலாநிதி பத்ர் ஹமத் அல் -ஈஸா (2 ஆவது வலம்) அவர்கள் பாராட்டி கௌரவித்தார்கள்

இதேபோல் 2015 ஆம் ஆண்டுக்கான தேர்வில் வாழைச்சேனை யைச் சேர்ந்த ரஷாத்  தாஹிர்  92.80%புள்ளிகளையும்  நீர்கொழும்பு பலகத்துறையைச் சேர்ந்த முஹம்மத் ஹஸன் இப்னு அப்பாஸ்  92.50% புள்ளிகளையும் பெற்று பல்கலைக்கழக அனுமதி பெற்றுக்கொண்டனர்

குவைத் உயர் கல்வி அமைச்சின் கீழ் கடந்த பல தசாப்தமாக இயங்கி வரும் இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் ஊடாக இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட  இலங்கை மாணவர்கள்  சிறப்பான முறையில் சித்தி எய்து தமது கலை மானி ,முதுமானி பட்டங்களை முடித்துவிட்டு குவைத்திலும் வெளி நாடுகளிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர் .

இவர்களது ஒளிமயமான எதிர் காலத்துக்கு தமது நல்லாசிகளை தெரிவித்துக் கொள்வதில் குவைத் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகம் பெரு மகிழ்ச்சி அடைகிறது .




4 comments:

  1. தாய் நாட்டுக்கும் தாய் தந்தையருக்கும் பெருமை தேடித்தந்த பலகத்துறைச் செல்வன் முகம்மது ஸஜாத் சம்சுல் ஆப்தீன் மற்றும் வரக்காப்பொலையைச் சேர்ந்த யமானி ஜுனைத் முகம்மது அக்ரம் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Masha Allah. Proud of u guys

    ReplyDelete
  3. ما شاء الله بارك الله فيكم يا أحبتنا

    ReplyDelete

Powered by Blogger.