Header Ads



ராஜித்தவின் குருட்டு விளக்கம்

ஐரோப்பிய அமைச்சர்களுடன் இலங்கை அமைச்சர்களை ஒப்பீடு செய்ய முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சர்களையும் ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்களையும் ஒப்பீடு செய்வது நியாயமாகாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், இலங்கை அமைச்சர்களைப் போன்று நாடு முழுவதும் ஐரோப்பிய அமைச்சர்கள் பயணிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமது மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சில பகுதிகளில் போர்வீல் வாகனங்களை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சொகுசு வாகனங்கள் என ஊடகங்களில் அடையாளப்படுத்தப்பட்டாலும் அவை சொகுசு வாகனங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

1 comment:

Powered by Blogger.