துருக்கி விமான நிலையத்தில், பயங்கரவாதியை சுட்டுக்கொல்லும் காட்சி (வீடியோ)
துருக்கியின் Ataturk விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
முதலில் வெளிநாட்டு பயணிகளை நோக்கி சரமாரியாக சுட்ட தீவிரவாதிகள் பின்னர் பொதுமக்களுடன் ஒன்றாக கலந்து தாங்களும் தப்பி ஓடுவதை போல நாடகமாடியுள்ளனர், அப்போது தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.
இதில் ஒரு தீவிரவாதி பயணிகளை நோக்கி சுடத் தொடங்கினர், அப்போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது தீவிரவாதியை சுட்டுக் கொன்றுள்ளார், இவன் வைத்திருந்த வெடிகுண்டு தரையில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன, இதுகுறித்து பிரதமர் கூறுகையில், ஐஎஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருக்ககூடும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. தீவிரவாதிகள் கார் மூலம் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர், பாதுகாப்பு சோதனைகளில் இருந்து தப்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=No97uCxoKWw

தலைப்பு சரியா? பயங்கரவாதி சுடப்பட்டு விழுந்ததும் அவரது துப்பாக்கியும் அவனும் தூக்கி வீசப்படுகிறான். உடனே ஒரு பொலிஸ் அதிகாரி அவனிடம் வருகிறார் ஆனால் அவனது Suicide Belt ஐ கண்டதும் தெரித்து ஓடுகிறார். பின் அவன் அதை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொள்கிறான்.
ReplyDelete