மைத்திரி - ரணில் ஆசியுடன் பாதுகாப்பாக இருக்கும் கொள்ளையர்கள்
கடந்த அரசாங்கத்தில் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளையிட்டவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசியுடன் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இவர்களிடம் விசாரணைகள் நடத்தப்படுகின்றதே தவிர அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு விசாரணை செய்ய இடமளித்துவிட்டு, இடைநடுவில் தடைகளை செய்து, ராஜபக்சவினர் சுதந்திரமாக நடமாட வழியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.
வீரவன்ஸ, கம்மன்பில போன்றவர்களை சுதந்திரமாக நடமாட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுமதித்துள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவை பயன்படுத்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டு மூன்றாக உடைக்க வேண்டும் என்ற தேவையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்த வேண்டுமாயின் ராஜபக்சவினர் வெளியில் இருக்க வேண்டும் என்று விக்ரமசிங்க எண்ணுகிறார். நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் ஆனால், எதுவும் நடப்பதில்லை. விசாரணைகளுக்கு போகிறார்கள், ஊடகங்களிடம் வெளியில் வருகிறார்கள்.
பாட்டியின் காணி விவகாரம் தொடர்பில் யோஷித்த ராஜபக்ச தற்போது சிறையில் இருக்க வேண்டும். தெஹிவளை முழுவதும் யோஷித்தவின் பாட்டி காணிகளை வாங்கியுள்ளார். மிகவும் ஆச்சரியத்திற்குரிய பாட்டி. எமக்கு அப்படியான பாட்டி இருந்திருந்தால் எப்படி இருக்கும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள ஜனாதிபதியும் விசாரணைகளுக்கு தடையேற்படுத்தி வருகிறார் எனவும் இதன்போது நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Post a Comment