Header Ads



சிங்ஹலே என்றால் என்ன..?

-சிங்களத்தில்:திஸரனீ குணசேகர
தமிழாக்கம் : எம்.இஸற்.எம்.நயீம்-

எதிர்­வரும் நவம்பர் மாதத்தில் நடை­பெ­ற­வி­ருக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்­களைத்  தெரிவு செய்­வ­தற்­கான முயற்சி இந்த நாட்­களில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றது. குடி­ய­ரசுக் கட்சி வேட்­பா­ளர்­க­ளி­டையே முன்­ன­ணியில் பெருஞ்­செல்­வந்­த­ரான டொனால்ட் ட்ரம்ப் திகழ்­கின்றார். ட்ரம்ப் குடி­ய­ரசுக் கட்­சியின் வல­து­சாரி இன­வாதப் போக்­கினைப் பிர­தி­ப­லிப்­பவர்.

அவ­ரது பார்­வையில் ‘உண்­மை­யான அமெ­ரிக்­கர்கள்’ என்­ப­வர்கள் வெள்ளைத் தோலை உடைய கிறிஸ்­த­வர்கள் மாத்­தி­ரமே ஏனைய அனைத்து அமெ­ரிக்­கர்­களும் வெளி­யார்கள் மாத்­தி­ர­மன்றி உள்­நாட்டு எதி­ரி­க­ளாவர். 

முஸ்­லிம்கள் அக­தி­க­ளா­கவோ உல்­லாசப் பிர­யா­ணி­க­ளா­கவோ அமெ­ரிக்­கா­வினுள் நுழை­வதைத் தடுக்க வேண்டும் என ட்ரம்ப் கடந்த டிசம்பர் மாதம் வெளிப்­ப­டை­யா­கவே கருத்து வெளி­யிட்டார்.

இவ­ரது இந்த இன­வாதக் கருத்துக் கார­ண­மாக இஸ்­லா­மியத் தீவி­ர­வாதப் போக்­கு­டைய ஐ.எஸ். போன்ற அமைப்­புக்­க­ளுக்கு நன்­மையே அன்றி எந்தப் பாதிப்பும் ஏற்­ப­டப் போ­வ­தில்லை என்று அர­சியல் விமர்­ச­கர்கள் மீண்டும் மீண்டும் அபாய எச்­ச­ரிக்கை விடுத்­த­போதும் ட்ரம்ப் அதனைச் சிறிதும் செவி­ம­டுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

இவர் இத்­த­கைய கருத்­துக்­களைத் தெரி­வித்து ஒரு வார­காலம் கழிந்­த­துதான் தாமதம் அல்­கய்தா அமைப்­போடு தொடர்­பு­டைய சோமா­லி­யாவின் தீவி­ர­வாதக் குழு­வான அஷ்­சபாப் அமைப்பு தமது அமைப்­புக்கு அங்­கத்­த­வர்­களைத் திரட்டும் விளம்­பர வீடியோ காட்­சியில் ட்ரம்பின் கருத்­தி­னையும் உள்­வாங்­கினர்.

டரம்பின் இந்தக் கருத்து கார­ண­மாக முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான தீவி­ர­வா­தி­க­ளினால் சமா­தா­னத்தை விரும்பும் முஸ்­லிம்­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டு­கின்­ற­போ­திலும் தீவி­ர­வாத முஸ்லிம் அமைப்­புக்­க­ளுக்கு நன்­மை­யையே ஏற்­ப­டுத்தும். ஒன்­றுக்­கொன்று எதி­ரான தீவி­ர­வா­திகள் தெரிந்தோ தெரி­யா­மலோ ஒன்­றை­யொன்று பலம் பெறச் செய்­கி­றார்கள் என்­பதை வர­லாறு நெடு­கிலும் நிரூ­பித்­துள்­ளது. இலங்­கை­ய­ரான எமக்கும் இது புதி­யதோர் அனு­பவம் அல்ல. இதற்கு மிகச் சிறந்த உதா­ரணம் கறுப்பு ஜூலை­யாகும்.

கறுப்பு ஜூலைக்­கான உட­னடிக் கார­ண­மாக அமைந்­தது இலங்கை இரா­ணுவ வீரர்கள் 13 பேரின் படு­கொ­லைக்குக் கார­ண­மாக அமைந்த போ போ பிராவோ (Four Four Bravo) தாக்­கு­த­லாகும். எல்.டி.டிஈ.இத்­தாக்­கு­தலை மேற்­கொள்­ளும்­போது அது பாரிய பொரு­ளா­தார ஆளணி நெருக்­க­டிக்கு உட்­பட்­டி­ருந்­தது. எனினும் புலிகள் அமைப்பின் இந்த எல்லாப் பிரச்­சி­னை­களும் கறுப்பு ஜூலை­யுடன் முடி­வுக்கு வந்­தது.

இதன் பய­னாக புலி­களின் அமைப்­புக்குத் தேவை­யான ஆள­ணி­யை­விட அதி­க­மான தொகை­யி­னரைச் சேர்த்­துக்­கொள்ள வாய்ப்புக் கிடைத்­தது. போதிய நிதி வச­தி­க­ளையும் ஆயு­தங்­க­ளையும் பெற்றுக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது. நீதியை விரும்பும் சாதா­ரண தமிழ் மக்­க­ளுக்குச் சாப­மாக அமைந்த கறுப்பு ஜூலை புலிகள் அமைப்­புக்கு ஆசீர்­வா­த­மாக அமைந்­தது.

தற்­போது தலை தூக்­கிக்­கொண்­டி­ருக்கும் “சிங்­ஹலே” அமைப்பு வளர்ச்சி பெறு­மாயின் அதுவும் இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே உள்ள தீவி­ர­வாத சிறு தொகை­யி­ன­ருக்கு மிகவும் சாத­க­மான ஒரு சூழ்­நி­லையை உரு­வாக்க முடியும்.

‘சிங்­ஹலே’ பரம்­பரைக் கதைகள்
சிங்­ஹலே நம்­பிக்­கை­க­ளுக்கும் கோசத்­துக்கும் அடிப்­ப­டை­யாக அமை­வது சிங்­கள இனத்தின் தோற்றம் பற்றி மகா­வம்­சத்தில் கூறப்­படும் கருத்­தாகும். மகா­வம்சக் கதைக்­கேற்ப இந்­தி­யாவின் வங்க நாட்டு சுப்­பா­தேவி எனும் அர­சி­ளங்­கு­ம­ரியின் கதையே இதன் மூலா­ரம்­ப­மாகும். சுப்­பா­தேவி எப்­போதோ ஒரு நாளில் காட்டு மிரு­கங்­களின் அர­ச­னோடு (சிங்­கத்­தோடு) சக­வாசம் கொள்வாள் எனக் குறி­கா­ரர்கள் கூறி­யி­ருந்­தனர்.

இந்த இள­வ­ரசி மிகவும் அழ­கா­னவள் என்றும் பார்ப்­போரை வசீ­க­ரிக்­கக்­கூ­டிய கவர்ச்சி மிக்க தோற்­ற­மு­டை­யவள் என்றும் அவள் அரச மாளி­கையில் இருந்து தப்பிச் சென்று மகத நாட்­டுக்கு செல்லும் ஒரு கூட்­டத்­தா­ருடன் இணைந்து செல்­லும்­போது லாலா நாட்டின் சிங்­க­மொன்று இந்தக் கூட்­டத்­த­வர்­களில் பல­ரைக்­கொன்று தின்­ற­தோடு சுப்­பா­தேவி அந்தச் சிங்­கத்தின் குகைக்குச் சென்று வாழ்ந்­த­தா­கவும் மகா­வம்சம் கூறு­கி­றது.

சிறிது காலத்தின் பின் இந்த சிங்க மனித சோடிக்கு இரட்டைக் குழந்­தைகள் பிறந்­த­தா­கவும் ஆண்­கு­ழந்­தையின் கைகள் இரண்டும் கால்­க­ளி­ரண்டும் சிங்­கத்தின் கைகால்­களைப் போன்­றி­ருந்­த­தா­கவும் அதனால் அக்­கு­ழந்தை சிங்­க­பாகு (சிங்­கத்தின் கை)  என அழைக்­கப்­பட்­ட­தா­கவும் மகா­வம்சம் கூறு­கி­றது.

மனி­தர்­க­ளுக்கும் மிரு­கங்­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்­பினைச் சுற்றி உரு­வா­கிய இத்­த­கைய கதைகள் உலகில் அபூர்­வ­மா­ன­வை­யல்ல.

எனினும் அவை வெறு­மனே கற்­பனைக் கதை­க­ளோ தேவதைக் கதை­க­ளோ அன்றி உண்மைச் சம்­ப­வங்­க­ளல்ல. மனித இனப் பெண் ஒரு­வ­ருக்கும் சிங்­க­மொன்­றுக்கும் கணவன் மனை­வி­யாக உறவு கொள்ள முடி­யாது.

மட்­டு­மல்ல அவ்­வா­றான உறவின் மூலம் குழந்­தைகள் உரு­வா­கவும் முடி­யாது என்­பது அணு­வ­ள­வேனும் மூளை­யுள்ள ஒரு­வரால் கூட உணர்ந்து கொள்ள முடியும்.

ஏதா­வது ஒரு மனிதன் சிங்­கத்தின் கைகால்­க­ளோடு பிறந்­தி­ருந்தால் இன்­றைய கால­கட்­டத்தை விட கடந்த காலங்­க­ளி­லேயே அத்­த­கைய பிற­வியை விகா­ர­மான ஒன்­றாகக் கருதி முழு சமு­தா­ய­முமே கட்­டா­ய­மாக புறக்­க­ணித்தே இருக்கும் என்­பதில் எவ்­வித ஐய­மு­மில்லை.

சுப்பா தேவி­யி­னதும் சிங்­கத்­தி­னதும் கதை தேவதைக் கதை­க­ளுக்கும் கிரேக்க பேய்க்­க­தை­க­ளுக்கும் அரா­பிய புராணக் கதை­க­ளுக்கும் ஒப்­பான கட்­டுக்­க­தை­களே அன்றி வர­லா­றாக அமை­யாது. விஞ்­ஞான வளர்ச்­சியோ உலகைப் பற்றி தெளிவோ அற்ற முன்­னேற்­ற­ம­டை­யாத பண்­டைய காலத்தில் சிங்­க­பாகு கதை போன்ற மூட நம்­பிக்­கைகள் வர­லாற்று ஏடு­களில் உள்­ள­டக்­கப்­படல் மிகவும் இல­கு­வாக நிகழ்­பவை. வர­லாறு என்ற கலையின் தந்தை அதா­வது உலகின் முத­லா­வது வர­லாற்று ஆசி­ரி­ய­ராகக் கரு­தப்­படும் ஹெரோ­டோ­டஸின் (Herodotos) Histories எனும் வர­லா­றுகள் என்ற நூலில் இத்­த­கைய புராண புனை­க­தை­களைக் காணலாம்.

அவ­ரது அன்­றைய கால­கட்­டத்தில் நில­விய நம்­பிக்­கை­களைப் பற்றி அறிந்­து­கொள்­வதே அல்­லாமல் இவற்றைத் தற்­கா­லத்தில் வர­லா­றாகக் கரு­து­வ­தில்லை. மகா­வம்சக் கதை­களும் இத்­த­கைய நம்­பிக்­கைகள் பற்­றி­யதே. எமது நாட்­டிலும் இவை பிர­பல்­ய­மாக விளங்­கின என்­ப­தையே காட்­டு­கின்­றன.

‘சிங்­ஹலே’ என்­பதும் வெறு­மனே புராண கட்­டுக்­க­தையே அன்றி வர­லாறு அல்ல. மகா­வம்ச கதையின் எஞ்­சிய பகு­தி­களை அவ­தா­னிக்கும் போது அறி­வுள்ள எவ­ருக்கும் தெளி­வாக விளங்கக் கூடி­ய­தாகும். மகா­வம்சக் கதையின் படி சிங்­க­பாகு தனது தந்­தையைப் படு­கொலை செய்த கொலை­கா­ர­னாவான். அவன் தனது 16 ஆவது வயதில் தனது தாயையும் சகோ­த­ரி­யையும் அழைத்துக் கொண்டு குகை­யி­லி­ருந்து வெளி­யே­றினான்.

சிங்கம் தனது குடும்­பத்தைத் தேடிச்­சென்ற போது சிங்­க­பாகு தனது தந்­தையைக் கொலை செய்தான். அதன் பின்னர் சிங்­க­பாகு சிங்­க­புரம் என்ற தலை நகரை அமைத்து அதன் அர­ச­னாகத் தன்னைப் பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­ட­தோடு தனது சகோ­த­ரி­யையும் திரு­மணம் செய்­து­கொண்டான். சிங்­க­பாகு இன்று உயி­ரோடு இருந்தால் தனது தந்­தையைக் கொலை செய்த குற்­றத்­துக்கு மரண தண்­ட­னைக்கும் தனது சகோ­த­ரியைத் திரு­மணம் செய்­து­கொண்­ட­மைக்­காக சிறைத் தண்­ட­னைக்கும் ஆளா­க­வேண்­டி­யி­ருக்கும். 

சிங்­க­பாகு சிங்­க­சீ­வலி தம்­ப­தி­யி­னரின் மூத்த புதல்­வ­னான விஜ­யனைப் பற்றி மகா­வம்சம் குறிப்­பிடும் தக­வ­லின்­படி அவன் ஒரு துட்­ட­னா­கவே அறி­யப்­ப­டு­கின்றான். விஜ­யனும் அவ­னது தோழர்­களும் எவ்­வ­ளவு துஷ்­டர்­க­ளாக இருந்­தார்கள் என்­பதை மகா­வம்சம் குறிப்­பி­டும்­போது விஜ­ய­னதும் அவ­னது தோழர்­க­ளதும் கொடு­மை­களைப் பொறுக்க முடி­யாத பொது மக்கள் அர­ச­னிடம் சென்று மாளி­கையைச் சுற்றி வளைத்து விஜ­யனைக் கொலை செய்­து­வி­டு­மாறு வேண்டி நின்­ற­தா­கவும் மகா­வம்சம் குறிப்­பி­டு­கின்­றது.

அரசன் சிங்­க­பாகு தனது புதல்வன் விஜ­ய­னையும் அவ­னது துட்ட தோழர்கள் 700 பேரையும் தலை முடியை மழித்து பட­கு­களில் ஏற்றி கடலில் விட்­ட­தாகக் குறிப்­பி­டு­வ­தோடு அவர்கள் முதலில் ‘சுப்­பா­ரக’ என்ற நாட்டை அடைந்­த­தா­கவும் அங்கும் அவர்­க­ளது கொடுமை கார­ண­மாக அங்­கி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட்­ட­தாக மகா­வம்சம் குறிப்­பி­டு­கின்­றது.

‘சிங்­ஹலே’ மூட நம்­பிக்கை பற்­றிய இரு வேறு கருத்­துக்கள் உள்­ளன. ஒன்று சிங்­கத்தின் பரம்­பரை பற்­றிய கருத்து. மற்­றை­யது புத்­த­பெ­ருமான் தனது பரி­நிர்­வாண நிலை­யின்­போது இலங்­கையை விஜ­ய­னுக்கு வழங்கி அதனைப் பரி­பா­லிக்­கு­மாறு கட­வு­ளர்­க­ளுக்குச் சொல்லி மறைந்தார் என்ற கருத்து.

புத்­த­பி­ரானின் வாழ்வின் இறுதிப் பகு­தியை பற்­றிய தக­வல்­க­ளையும் அவர் பரி­நிர்­வாணம் பெற்ற தக­வல்­க­ளையும் விரி­வாக எடுத்துக் கூறு­வது அவ­ரது பரி­நிர்­வாண சூத்­தி­ரத்­தி­லாகும். இதில் எந்­தவோர் இடத்­திலும் விஜ­யனைப் பற்­றியோ இலங்­கையைப் பற்­றியோ ஒரு வார்த்­தை­கூட குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. இந்த சூத்­தி­ரத்­தின்­படி தனது மறைவின் பின்னர் தான் போதித்த தர்­மத்தைப் பின்­பற்றி நடக்­கு­மாறு போதித்­தாரே தவிர  தூய்­மை­யான புத்த தர்மம் இலங்­கையில் மட்­டுமே  நிலைத்து நிற்கும் என எங்கும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.  

இந்தக் கதையும் மகா­வம்ச ஆசி­ரி­யரின் கற்­பனைக் கதையோ அன்றேல் அக்­கா­லத்தில் சமூ­கத்தில் நில­விய நம்­பிக்­கையோ ஆகுமே அல்­லாமல் உண்­மை­யல்ல. இந்த வகையில் “சிங்­ஹலே” என்­பது வர­லாற்று உண்­மை­யல்ல. திரி­வு­ப­டுத்­தப்­பட்ட கற்­பனைக் கதை­யாகும். இது இயற்­கைக்கு மாற்­ற­மா­னதும் வர­லாற்­றுக்கும் திரி­பீ­ட­கத்­துக்கும் முர­ணா­ன­து­மாகும். இதனைத் தலைமேற் சுமந்து நிற்­ப­வர்கள் மூட நம்­பிக்­கை­யையும் உண்­மை­யையும் பிரித்து அறிந்து கொள்ள முடி­யாத புத்தி  குறைந்­த­வர்­க­ளாவர். அல்­லது மீண்டும் யார் யாரு­டை­யதோ  இரத்­தத்தை ஒட்டி கை தவ­றிப்­போன அதி­கா­ரத்தை  மீண்டும் கைப்­பற்றிக் கொள்­ளலாம் என பகற்­க­னவு காணும் சந்­தர்ப்­ப­வா­தி­க­ளாவர். 

கலங்­கிய குட்­டையில் மீன் பிடித்தல்  
இற்­றைக்குப் பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் திடீ­ரென பொது­பல சேனா என்ற அமைப்பு தோற்றம் பெற்று மின்னல்  வேகத்தில் வளர்ச்சி பெற்­றது. ‘ஹலால்’ பற்­றிய பீதி எனப்­படும் மாயை ஒன்றைப் பற்றிப் பிடித்­துக்­கொண்டு இந்த நாட்டில் சிங்­கள  முஸ்லிம் பிரச்­சி­னை­யொன்றை உரு­வாக்கி விடு­வதில் இந்த அமைப்பு மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களின் பிர­தி­ப­லிப்பே அளுத்­கமை  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­த­லாகும்.

 “சிங்­ஹலே” அமைப்பின் திடீர் தோற்­றமும் இதற்குச் சம­மா­ன­தாகும்.  சிங்­கள பெளத்த இன­வா­தத்தைத் தூண்டி  மோத­லொன்றை ஏற்­ப­டுத்­து­வதே இதன் நோக்கம் என்­பது தெளிவு. 

நாடு சுதந்­திரம் பெற்­றது முதல் இந்த நாட்டின் அர­சியல்  கட்­சிகள் தமது ஆத­ரவை அதி­க­ரித்­துக்­கொள்­வ­தற்­கா­கவும்  எதி­ரி­க­ளுக்கு தாக்­குதல் நடத்­து­வ­தற்­கா­கவும் இன­வா­தத்­தையே ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்திக் கொண­டனர். ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உட்­பட இட­து­சா­ரிகள் எனக்­கூ­றிக்­கொள்ளும் கட்­சி­களும் தெற்கில் இந்­தப்­பா­வச்­செ­ய­லுக்கு பங்­க­ளிப்பு செய்­த­தோடு தமிழ், முஸ்லிம் கட்­சி­களும் வடக்­கிலும் கிழக்­கிலும்  இந்த சந்­தர்ப்­ப­வாத வழி­மு­றை­யி­னையே கைக்­கொண்­டனர். 

2015 ஜன­வ­ரியில் ஏற்­பட்ட அர­சியல் மாற்­றத்தின் பின்னர் ஏற்­பட்ட சாத­க­மான மாற்றம் என்­ன­வெனில் நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சிகள் உட்­பட மக்கள் விடு­தலை முன்­ன­ணியும், தமிழர் கூட்­ட­மைப்பும் முஸ்லிம் காங்­கி­ரஸும் தமது அர­சியல் இலக்­காக இன­வா­தத்தைப் பயன்­ப­டுத்­து­வதை நிறுத்­திக்­கொண்­ட­மை­யாகும். 

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியின் போது கொதித்­துக்­கொண்­டி­ருந்த  இன­வாத மற்றும் மத­வாத போக்­குகள் சமூக அர­சியல்  தளத்­தி­லி­ருந்து ஒதுக்­கப்­பட்­ட­மைக்­கான காரணம்   நாட்டின் தலை­வர்கள் இன­வா­தத்தைத் தூண்டும்  போக்­கினை நிறுத்­தி­ய­மை­யாகும். சிங்­கள, தமிழ், முஸ்லிம்  மக்­க­ளி­டையே சந்­தே­கமும் பயமும் முற்­றாக ஒழிந்­து­வி­டா­விட்­டாலும் மீண்டும் இன மத ரீதி­யி­லான  முரண்­பா­டுகள் தோற்றம் பெறு­வ­தற்­கான வாய்ப்­புகள் கடந்த ஓராண்டு காலத்­தினுள் மிகவும்  பல­வீ­ன­ம­டைந்­துள்­ளன. 

“சிங்ஹலே” இயக்கம் போன்­ற­வற்றின்  இலக்­காக  இருப்­பது அணைந்து போன உள்­ளங்­களை மீண்டும்  குரோதம், பகைமை, அச்சம்  என்­ப­வற்றைக் கொண்டு வெறி­கொள்ளச் செய்­வ­தாகும். மீண்டும் முஸ்லிம் பூதம்,  தமிழ்ப் பூதம் ஒன்றைப் புனைந்தால் தமக்கு இந்தச் சவால்கள், அச்­சு­றுத்­தல்­க­ளி­லி­ருந்து பாது­காப்­ப­ளிக்கும் ‘பல­மான’ தலை­மை­யொன்று அவ­சியம் என்­பதை சிங்­கள மக்கள் மத்­தியில் தோற்­று­விக்­கலாம் என்று “சிங்­ஹலே” அமைப்பை ஆயு­த­மாக இயக்கும் அர­சி­யல்­வா­திகள் நினைக்­கி­றார்கள் என்­பது உண்மை. மக்­க­ளுக்குத் தம்மைப் பாது­காக்­கக்­கூ­டிய ஒருவர் தேவைப்­ப­டு­வது ஏதா­வது அச்­சு­றுத்­தல்கள் இருந்தால் மட்­டுமே. “சிங்­ஹலே” அமைப்பு இந்தப் பணி­யையே செய்­து­வ­ரு­கின்­றது. 

இஸ்­லா­மிய அரசு (Islamic State IS) என்ற அமைப்பு  உலகில்  பல நாடு­க­ளுக்கு ஓர் அச்­சு­றுத்­த­லாக உள்­ளது. அது ஈராக்­கிலும் சிரி­யா­விலும் சில பகு­தி­களைக்  கைப்­பற்றி அங்கு மிகவும் குரூ­ர­மான ஆட்­சி­யொன்றை  நடாத்­து­கின்­றது. இலங்கை முஸ்­லிம்­களில் ஒரு  தொகை­யினர் இவ்­வ­மைப்பில் இணைந்­து­கொள்ள இர­க­சி­ய­மாக நாட்டை விட்டு வெறி­யேறி உள்­ளனர் என்றும் அவர்­களில் இருவர் மர­ண­ம­டைந்­துள்­ள­தா­கவும் ஊட­கங்கள்  அறி­வித்­தி­ருந்­தன.

புலி­களின் அமைப்­புக்கு அந்த அமைப்பு தோல்­வி­ய­டை­யும்­வரை நிதி­யி­னாலும் ஆயு­தங்­க­ளி­னாலும் எந்தக் குறை­பாடும் ஏற்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்கு இல்­லாமல் போனது மனித பலமும் சர்­வ­தேச ஆத­ர­வு­மாகும்.  

அவர்­க­ளுக்கு மிக முக்­கி­ய­மான இந்தக் கார­ணிகள்  இரண்டும் இல்­லாமல் போனது அவர்­களின் குரூர செயற்­பா­டு­களாலும் பயங்­கர நட­வ­டிக்­கை­க­ளி­னா­லு­மாகும்.  ஐ.எஸ். அமைப்பு புலிகள் அமைப்பை விட மிகவும் கொடூ­ர­மான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றது.

மத்­திய  கிழக்­கி­லுள்ள முஸ்லிம் பக்­தர்கள் ஐ.எஸ். அமைப்பைச்  சுற்றி ஒன்­று­ப­டு­வ­தற்கு மாறாக நாட்டை விட்டே வெளி­யேறி தப்­பிச்­செல்­கின்­றனர். ஐ.எஸ்.  அமைப்பின் கொடூரத் தன்­மை­களை அறி­யாத, அதன் கவர்ச்­சி­க­ர­மான  பிர­சா­ரங்­க­ளினால் கவ­ரப்­பட்ட ஐரோப்­பிய, அமெ­ரிக்க, ஆசிய நாடு­களைச் சேர்ந்த முஸ்­லிம்கள் இவ்­வ­மைப்பில்  இணை­கின்­றனர்.

இலங்­கை­யி­லி­ருந்தும் தமது அமைப்­புக்குத் தேவை­யான அங்­கத்­த­வர்­களைச் சேர்த்­துக்­கொள்ள ஐ.எஸ். அமைப்­பினர் நட­வ­டிக்கை எடுப்­பார்கள் என்­பது உறுதி. அதி­லி­ருந்து  தவிர்த்­துக்­கொள்­வ­தற்­கான ஒரே வழி இந்த நாட்டின்  முஸ்லிம் இனத்­த­வர்கள் குறிப்­பாக முஸ்லிம் இளை­ஞர்கள் விரக்­தி­யா­ளர்­களின் சூழ்ச்­சி­க­ளி­லி­ருந்து  பாது­காத்­துக்­கொள்­வ­தாகும். 

முஸ்லிம் விரக்­தி­யா­ளர்கள் பலம் பெறு­வ­தற்கு ஒரு முக்­கிய கார­ண­மாக அமை­வது  அமெ­ரிக்­காவின் டொனால்ட் ட்ரம்ப அல்­லது பிரான்ஸின்  மரீன் லீ பென் (Marine Le Pen)  போன்ற தலைவர்கள் மூலம் இலங்கையின் “சிங்ஹலே” போன்ற அமைப்புகளுக்கு இருக்கக்கூடிய பைத்தியக்காரத்தனமான  முஸ்லிம் விரோத செயற்பாடுகளாகும். 

கறுப்பு ஜூலை காரணமாகப் புலிகளின் அமைப்பு பலம்பெற்றது. “சிங்ஹலே” போன்ற அமைப்புக்கள் சிங்கள  இனவாதத்தைத் தூண்டுவதன் மூலம்  தமிழ் முஸ்லிம் மக்களிடையே உள்ள விரக்தியாளர்களுக்கு அதிக நன்மையைக் கொண்டு சேர்க்க முடியும் என்றும் இவ்வாறான அமைப்புகளைத் தோல்வியடையச் செய்வதற்கான ஒரே வழி அதனால் ஏற்படும் தீய விளைவுகளை வெளிப்படுவதன் மூலமே அன்றி அவர்களைச் சட்டத்தின் மூலம் தடைசெய்வதனால் அல்ல. 

அரசியல் யாப்பு திருத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி மீண்டும் 1987 இல் ஏற்பட்டது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் தமக்குக் கிடைக்காமற்போன  அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள ராஜபக் ஷ அணியினர் முயற்சிப்பது தெளிவு.

அன்றும் இன்றும் நாளையும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தவிர வேறு உய்யும் வழி ராஜபக் ஷ அவர்களுக்கும் ராஜபக் ஷ அணியினருக்கும் வேறில்லை. “சிங்ஹலே” அமைப்பினர் இந்த எதிர்பார்க்கப்படும் மாற்றத்துக்கான களத்தை அமைத்துக்கொடுக்கும் வேலையை செய்கின்றனர். 

“சிங்ஹலே” என்பது வெறும் மூட நம்பிக்கையாகும். இயற்கைக்கும் பெளத்த தர்மத்துக்கும் எதிரான திரிபுபடுத்தப்பட்ட கற்பனைப் புனைகதையாகும். தற்கால அரசியல் கண்காட்சியில் அதிகார வெறிகொண்ட சில அரசியல் தலைமைகளின் கைக்கூலிகளே. அதன் முடிவு சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் இரத்தக் களரியாகும். நாம் அத்தகையதொரு நரகப் படுகுழியில் விழுமளவு அறிவீனர்களல்ல. 

No comments

Powered by Blogger.