Header Ads



வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டால், பயணிகளிடம் கட்டணம் அறவீடு..!

ஜூலை மாதம் மேற்கொள்ளவிருக்கின்ற வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தின் போது, வீதிநெரிசல் கட்டணத்தையும், பயணிகளிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

மருதானையில் உள்ள சி.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்றுப் -01- புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்படும் போது, தனியார் பஸ்களில், எரிபொருட்களின் செலவு 27 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளது. ஆகையால், வீதி நெரிசல் கட்டணத்தை, பயணிகளிடமிருந்தே அறவிடவேண்டும். அவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்காவிடின், வேலைநிறுத்தப் போராட்டத்தில் கட்டாயம் குதிப்போம் என்றும் அவர் கூறினார்.

1 comment:

  1. நாட்டின் தேசிய நன்மை கருதிய தேசிய கொள்கைகளை வகுத்து சரியாக செயற்படுத்துவதை உறுதி செய்வது நடைமுறையில் ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும். அத்தகைய செயற்பாட்டை கொள்கையில் அமல்நடத்தாமைக்கு மக்களைத் தண்டிக்க தயாராகும் இவன் யார். அவனைப்பிடித்து மனித உரிமைகள் செயற்பாட்டுக்கு அமைக்குக் கொடுத்து இவனைத் தண்டிக்கச் செய்வது மக்கள் குழுக்களின் கடமையாகும். இத்தகைய சட்டங்களை இயக்கி செயற்படுத்தத்தூண்டுவது மக்களின் கடமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.