Header Ads



புதிய கட்சி தொடர்பில், மஹிந்த தரப்பு கலந்துரையாடல்


ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் உப தலைவர்களுடன் மஹிந்த ராஜபக்ஸ விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று -07- மாலை பத்தரமுல்ல -நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸவின் தொடர்பாடல் காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பசில் ராஜபக்ஸவும் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு புதிய கட்சி ஒன்றை அமைப்பதற்கு மஹிந்தவிடம் பிரதேச சபைத் தலைவர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கலந்துரையாடலில் பசில் ராஜபக்ஸ, பவித்ரா வன்னியாராய்ச்சி, இந்திக அனுருத்த, பிரசன்ன ரணவீர உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. ராஜபக்ச அன் கோ இப்படி படம் காட்டுவது எப்படி சரி SLFP யை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கே. தனி கட்சி ஆரம்பித்தால் நிட்சியமாக அவர்களால் மைத்திரியின் தலைமையில் உள்ள SLFP விட கூடுதல் வாக்குகள் பெற முடியாது என்பது நன்றாகவே அவர்களுக்கு தெரியும். அதே நேரம் அவர்களது வாரிசுகளால் அரசியல் தலைமைத்துவத்துக்கு வரமுடியாமல் போய்விட அதிக வாய்புகள் உள்ளது. மகிந்த தனிகட்சி அமைத்தால் அது UNP இக்கு நல்ல வாய்பாகவே அமையும்.

    ReplyDelete
  2. ராஜபக்ச அன் கோ இப்படி படம் காட்டுவது எப்படி சரி SLFP யை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கே. தனி கட்சி ஆரம்பித்தால் நிட்சியமாக அவர்களால் மைத்திரியின் தலைமையில் உள்ள SLFP விட கூடுதல் வாக்குகள் பெற முடியாது என்பது நன்றாகவே அவர்களுக்கு தெரியும். அதே நேரம் அவர்களது வாரிசுகளால் அரசியல் தலைமைத்துவத்துக்கு வரமுடியாமல் போய்விட அதிக வாய்புகள் உள்ளது. மகிந்த தனிகட்சி அமைத்தால் அது UNP இக்கு நல்ல வாய்பாகவே அமையும்.

    ReplyDelete
  3. It is a way of keep the voters with them. This will help them to make a political deal with the other parties when they got some seats in the parliament and loacal govt election in future. Again it is a trick of family politics. People around them need to realise we don't support a family politics. At the end, the family get the big potion and others will get the born. Like dogs get.

    ReplyDelete

Powered by Blogger.