Header Ads



இரும்பு தடைவேலியில் இடறிவீழ்ந்த ரோஹித, அவசர சிகிச்சைப் பிரிவில்

ஆர்ப்பாட்டத்தின்போது இரும்பு தடைவேலியில் இடறி வீழ்ந்த ரோஹித குணவர்தன தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது ரோஹித அபேகுணவர்தன, மற்றும் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீயானி விஜேவிக்ரம ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (24) கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது, இரும்பு தடைவேலியில் சிக்கியதன் காரணமாக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும், கீழே வீழ்ந்ததன் காரணமாக ஶ்ரீயானி விஜேவிக்ரமவும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டம், இலங்கை வங்கியின் பிரதான அலுவலகத்தின் ஊடாக நிதி அமைச்சு நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் மத்தியவங்கி நோக்கி செல்வதற்கு நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற சபையில் (கோப் - COPE) தனக்கு எதிராக இடம்பெற்று வரும் விசாரணைகளின் முடிவை அறியும் வரை, மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு மீண்டும் முன்வரமாட்டேன் என மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.


1 comment:

Powered by Blogger.