மதுபான தயாரிப்பில் முதலமைச்சர் - ஜனாதிபதிக்கும் விசயம் தெரிவிப்பு
நாட்டில் குறிப்பிட்ட இரண்டு மதுபானசாலைகள், செயற்கை எரிசக்தியை பயன்படுத்தி தற்போது விசேட மதுபானத் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவதாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோசடி முதலமைச்சர் ஒருவரின் உதவியுடன் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு மதுபான வடிகட்டலின் போது சிறிய வீதத்திலான தேங்காய், பனை, கள்ளு மற்றும் கித்துள் ஆகியன சேர்க்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் கள்ளினால் 45 முதல் 48 சதவீதம் வரையில் எரிசக்தியை உற்பத்திச் செய்ய முடியும்.
உள்நாட்டில் பெரும்பாலும் மதுபான தயாரிப்பிற்கு அதிகளவு கள்ளை பயன்படுத்தமாட்டார்கள் ஆனால் இந்த இரண்டு மதுபான சாலைகளும் சிறப்பு மதுபானம் தயாரிப்பதற்காக அதிகளவான கள்ளையே பயன்படுத்துகின்றன என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த முறையில் பல வகையான சிறப்பு மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றதோடு, குறித்த முதலமைச்சர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment