தலங்கம கைக்குண்டு வெடிப்பில், மூவர் உயிரிழப்பு
தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஹீனட்டிகும்புற வீடமைப்பு திட்ட வீதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பெண்கள் இருவரும் ஆணொருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
9 வயதான சிறுமியொருவரே காயமடைந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
தாய் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment