Header Ads



கெமுனுக்கு வேண்டியதைப் போன்று, பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது - ஹர்ச

தனியார் பஸ் போக்குவரத்து சபையின் தலைவர் கெமுனு விஜேரத்தின அவருக்கு வேண்டியதைப் போன்று பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று -02- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

தனியார் பஸ் போக்குவரத்து சபையின் தலைவர் நினைத்த மாத்திரத்தில் பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் முறை எமது நாட்டில் இல்லை என்றும், அதை தேசிய போக்குவரத்து சபையே முடிவெடுக்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் கூறினார்.

கொழும்பில் நேற்று தனியார் பஸ் போக்குவரத்து சபையின் தலைவர் கெமுனு விஜேரத்தின “ஜூலை மாதம் முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும், இதற்கான காரணம் தற்போது அதிகரிக்கப்பட்ட வாகன நெரிசலினால் டீசல் அதிகமாக இழக்கப்படுகின்றது, இதனாலேயே பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது.” எனவும் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், கெமுனு விஜேரத்தின கூறுவதிலும் ஒருவகை உண்மை உள்ளது. வாகனங்களின் அதிகரிப்பால் வாகன நெரிசலும் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் டீசலின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இருப்பினும் தனிப்பட்ட யோசனையை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கருத்து தெரிவித்தார்.

இவற்றிற்கான ஒரே முடிவை தேசிய போக்குவரத்து சபை மட்டுமே தரமுடியும், ஆகவே இவர்கள் தேசிய போக்குவரத்து சபையிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தால் நிச்சயம் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் இதன்போது வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா கூறினார்.

No comments

Powered by Blogger.