முன்னாள் அமைச்சரின் உடல், வைத்தியப் பீடத்திற்கு ஒப்படைப்பு
மறைந்த முன்னாள் பொது நிர்வாகத்துறை மற்றும் நெசவுக் கைத்தொழில் அமைச்சர் யூ.பீ.விஜேகோனின் பூதவுடல், அவரது கோரிக்கைக்கு அமைவாக கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் யூ.பீ.விஜேகோன், சிகிச்சை பலனின்றி தனது 79ஆவது வயதில் இன்று(12) காலமானார்.
இவர் ஓர் ஆசிரியராகவும் சிவில் சேவை அதிகாரியாகவும், தம்பதெனிய தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பூத உடல் இறுதி கிரியைகளின் பின்னர், போராதனை பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்துக்கு வழங்கப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Post a Comment