Header Ads



வசீம் தாஜுதீன் கொலை செய்­யப்­பட்ட இடத்­தில், அரைக் காற்­சட்­டை­யுடன் நின்ற அநுர

- MFM.Fazeer-

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்ட இடத்­துக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க அதி­காலை வேளையில் அரைக் காற்­சட்­டை­யுடன் சம்­பவ இடத்­துக்கு வந்­துள்ளார்.

இது குறித்து எம்­மிடம் சாட்­சி­யங்கள் உள்­ளன. இந்த விட­யத்தை விசா­ரணை செய்யும் போது நாம் அனுர சேன­நா­யக்­கவின் சார­தி­யாக கட­மை­யாற்­றிய பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரையும் விசா­ரணை செய்தோம்.

இதன்­போது குறித்த பொலிஸ் சார­திக்கு எந்த விட­யத்தை எப்­படி வாக்கு மூல­மாக வழங்க வேண்டும் என்­பதை அனுர சேன­நா­யக்க சொல்லிக் கொடுத்­துள்­ளதை எம்மால் அறிந்­து­கொள்ள முடிந்­தது.

எனவே சந்­தேக நப­ரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிணையில் விடு­த­லை­யானால் சாட்­சி­களை இப்­படிக் கலைத்­து­வி­டுவார்.

எனவே அது விசா­ர­ணைக்கு பாதிப்­பாக அமையும் என அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்க நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் தெரி­வித்தார்.

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இதன்­போது இந்த விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை மூடி மறைக்­கவும் கொலை சதி முயற்­சி­யுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும் சந்­தே­கிக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்­டுள்ள முன்னாள் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி சுமித் சம்­பிக்க பெரேரா, முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க ஆகி­யோ­ருக்கு பிணை வழங்­கு­மாறு முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து வாதிடும் போதே சிரேஷ்ட சட்­ட­வாதி இதனைச் சுட்­டிக்­காட்­டினார்.

நேற்­றைய வழக்கு விசா­ர­ணை­யின்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரி­களால் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யொன்று நீதி­வா­னிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

' கடந்த 14 நாட்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் பல்­வேறு விட­யங்கள் தெரி­ய­வந்­துள்­ளன. வஸீம் தாஜுதீன் விவ­கா­ரத்தில் முதலில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த அதி­கா­ரி­க­ளுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க அழுத்தம் கொடுத்­துள்­ளமை உறு­தி­யா­கி­றது. அத்­துடன் வாக்கு மூலம் பெறும் போதும் அதிலும் அவர் தலை­யீடு செய்து அழுத்­தங்­களை பிர­யோ­கித்­துள்ளார்.

இத­னை­விட முத­லா­வது சந்­தேக நப­ரான சுமித் சம்­பிக்க பெரேரா,  தாஜுதீன் விவ­காரம் குறித்து எமக்கு அளித்த விளக்கம் அனைத்தும் பொய்­யா­னவை என்­பது சாட்­சி­யங்கள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது. எனவே இவர்கள் இரு­வரும் விசா­ர­ணையை மூடி மறைத்­துள்­ளமை உறுதி.

எனினும் மனிதப் படு­கொ­லையை ஏன் இவர்கள் விபத்­தாக காட்ட வேண்டும், இதற்­கான அவ­சியம் என்ன என்ற இடத்­தி­லேயே தற்­போ­தைய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த கொலையுடன் இவர்களுக்கு சதி முயற்சி குற்றச் சாட்டு உள்ள நிலையில் அந்த சதி கொலையின் பின்னர் செய்யப்பட்டதா அல்லது கொலையின் முன்னர் பிரதான சந்தேக நபருடன் இணைந்து செய்யப்பட்டதா என்பதை வெளிப்படுத்த விசாரணைகள் தொடர்கின்றன என்றும் மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந் நிலையில் மேற்­படி இரு சந்­தேக நபர்­க­­ளி­னதும் விளக்­க­ம­றியல் ஜூன் 23 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­து.

 

No comments

Powered by Blogger.