புத்தளத்திற்கு பாயிஸ் தேவை
(சத்யன்)
புத்தளத்தின் தற்போதய அரசியல் சூழ்நிலையினைப் பார்க்கும்போது எந்தவித ஆக்கபூர்வமான அபிவிருத்தி நடவடிக்கைகளும், திட்டங்களும் இல்லாத, அரசியலிலும் ஒரு ஸ்த்திரமற்ற நிலையே காணப்படுகிறது. புத்தளத்தின் துரித வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் கே.ஏ.பாயிஸ் தேவை என்கின்ற கோசம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.
எந்தளவுக்கென்றால் பாயிஸை வெறுத்து ஒதுக்கிய பலரும்...புத்தள அரசியலில் ஏற்பட்டுள்ள ஒரு வகையான வெறுமை, மந்தம் என்பவற்றால் மீண்டும் அவரது மீள் வருகை இன்றியமையாத ஒன்று என வெளிப்படையாகவே கூறத்தொடங்கி உள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் மென்மேலும் எமது அரசியலுக்காக ஒரு எதிரியை உருவாக்கி அதனை வைத்து பிழைப்புத் தேடுவது (அரசியல் செய்வது) உகந்ததல்ல.
எனவே புத்தளத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பாயிஸ், மற்றும் தொழிலதிபர் அரசியல் பிரமுகர் அலி சப்ரி ஆகியோரை ஒரு திறந்த மனதுடன் கூடிய பேச்சுவார்த்தையின் மூலம் ஒரே அணியில் இணைத்து செயற்பட வைப்பதன் மூலம் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தினை ஏற்படுத்த முயற்சிக்கலாமே..??
ஒருவர் மாகாண சபை செல்லலாம்..இன்னொருவர் நகர சபைக்குச் செல்லலாம்.. ஒருவர் பாராளுமன்றம் செல்லலாம். இதனால் புத்தளத்துக்கு அபிவிருத்திகள் மலை போல் திரண்டு வருமே. இதற்கான தூய்மையான முயற்சிகளை..இரண்டு பக்கமும் சிறப்பான உறவுகளைப் பேணி வருபவர்களான நமது ஆசிரியர்கள் நவ்பல், இப்ராஹிம் நிஹ்ரீர் மற்றும் முஹ்ஸி ஆகியோர் மேற்கொள்ளலாமே.

Post a Comment