தாஜூடீன் கொலை குறித்த வீடியோ, காட்சிகள் ஓகஸ்ட் மாதத்தில் கிடைக்கப்பெறும்
-gtn-
பிரபல ரகர் வீரா வசீம் தாஜூடீன் கொலை குறித்த வீடியோ காட்சிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் கிடைக்கப்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை அணியிலும் ஹெவ்லொக்ஸ் அணியிலும் முக்கிய பொறுப்புக்களை வகித்த தாஜூடீன் 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
தாஜூடீன் கொலை குறித்த சீ.சீ.ரீ.வி காட்சிகள் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய தகவல் தொழில்நுட்ப நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பிலான விசாரணை அறிக்கை ஆகஸ்ட் மாதத்தில் கிடைக்கப் பெறும் என தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹென்பிட்டி காவல் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment