Header Ads



வற் வரி செலுத்த வேண்டியவர்கள் யார்..? அரசு வழங்கியுள்ள விளக்கம் இதோ..!

ஒரு மாதத்திற்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கு குறைவாகவும் ஒரு நாளைக்கு 33 ஆயிரத்து குறைவாகவும்  வருமானம் பெறும் சிறு தொழில் முயற்சியாளர்கள் வற் வரியில் இணைத்து கொள்ளப்படமாட்டார்கள். இந்த விடயத்தில் குழப்பம் கொள்ள தேவையில்லை. வரி செலுத்தாதவர்களே தேவையற்ற முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

 நிதிஅமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க

 மேலும் குறிப்பிடுகையில்,

 சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு வற் வரி அறவிடுவதில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை நாம் தீர்த்துள்ளோம். இதன்படி ஒரு நாளைக்கு 33 ஆயிரத்திற்கும் குறைவாகவும்  ஒரு மாதத்திற்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து குறைவாகவும்  வருமானம் பெறும் சிறு தொழில் முயற்சியாளர்கள் வற்வரியில் இணைத்து கொள்ளப்படமாட்டார்கள். சிறு தொழில் முயற்சியாளர்களின் குறித்த வருமானத்திற்கும் உட்பட்டவர்களும் வற் வரி பதிவாளர்களினால் பதிவு செய்யப்பட்டவர்களாகும். ஆகவே இவர்களிடம் பதிவாளர்கள் வரி கோரும் போது அதற்கான பணத்தை அரசாங்கம் தாங்கிக்கொள்ளும். 

எனவே இது தொடர்பில் சிறு தொழில் முயற்சியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன். எனினும் சுமுகமாக அனைவரும் எமது தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு சென்றனர். இதற்கும் மேலும் எதிர்ப்புகளை வெளியிட கூடியவர்கள் வரி செலுத்தாதவர்களாகும். எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. சிறு தொழில் முயற்சியாளர்களை பாதிக்கும் வகையில் தீர்மானங்களை நாம் எடுக்கப்போவதில்லை. மேலும் வரி செலுத்தாதவர்களின் கோப்புகள்  48 ஆயிரம் காணப்படுகின்றன.

No comments

Powered by Blogger.