Header Ads



மகிந்த + கோத்தாபய ஆகியோரின் குற்றச்சாட்டுக்கள் நிராகரிப்பு

கொஸ்கம மற்றும் வியாங்கொட ஆயுதக் களஞ்சியங்களை, சன அடர்த்தி குறைந்த பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு, அனுமதி கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பிக்கவுள்ளதாக,  பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், வியாங்கொட மற்றும் கொஸ்கம ஆயுதக் களஞ்சியங்களை இடம்மாற்றுவதற்கு தமது அரசாங்கம் திட்டமிட்டிருந்ததாகவும், அதனைப் புதிய அரசாங்கம் செயற்படுத்தத் தவறிவிட்டதாகவும், மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் கூறியிருந்த குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்தார்.

இப்படியொரு திட்டம் இருந்ததை நான் கேள்விப்படவேயில்லை. அப்படியொரு திட்டம் இருந்திருந்தால், உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுத்திருப்பேன்எ ன்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் தகவல் வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர, சலாவ இராணுவு ஆயுதக் கிடங்கு வெடிப்புக்குப் பின்னர், பொதுமக்கள் நடமாட தடைவிதிக்கப்பட்ட பிரதேசத்தின் அளவு தற்போது 500 மீற்றராக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முழு வீச்சில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.