Header Ads



சுவிஸில் இலங்கை குழந்தைகள் நோன்பு வைப்பு - இப்தாரும், தறாவியும் தினமும் நடைபெறுகிறது

ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான சுவிஸ் நாட்டில் சுமார் 200 இலங்கை முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

அவர்களை ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் வழிநடத்தி வருகிறது.

இந்த புனித ரழமான் மாதத்தில் சூரிச் - சீலீரனில் அமைந்துள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசலில் தினமும் இப்தார் நடைபெறுகிறது. 

இரவு நேரங்களில் தறாவிஹ் தொழுகை நடைபெறுவதுடன், சனிக்கிழமை தினத்தில் கியாமுல்லைல் தொழுகையும் நடைபெறுகிறது. பள்ளிவாசல் தலைவர் ஹனீப் மொஹமட் இமாமாக நின்று இந்த தொழுகைகளை நடாத்துகிறார்.

இவற்றில் இலங்கைச் சகோதர சகோதரிகள் உள்ளிட்டவர்களுடன் ஏனைய நாட்டு முஸ்லிம்களும் பங்குகொள்கின்றமை சிறப்பு அம்சமாகும்.

அதேவேளை இந்தமுறை சுவிஸில் வசிக்கும் இலங்கைச் சிறுமிகளில் 7, 8 வயது குழந்தைகள் கூட புனித ரமழான் நோன்பு கடைபிடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸில் அதிகாலை 2.40 மணிக்கு சஹர் முடிவடையும் நேரமாகும், நோன்பு திறக்கும் நேரம் இரவு 9.30 மணியாகும்.

இந்த நீண்ட நேரத்திலும்கூட இலங்கை பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகள் நோன்பு பிடிக்கின்றமையும், நோன்புடனே பாடசாலை செல்கின்றமையும் கவனிக்கத்தக்கது.

அத்துடன் சில சனி, ஞாயிறு தினங்களில் மாத்திரம் நோன்பு நோற்றும் வருகின்றனர்.

அதேவேளை இலங்கையின் தேசிய அணிக்கு விளையாடிய ஹனீப் ஹஸீப் நேற்று சூரிச்சில் நடைபெற்ற உள்ளுர் கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டியொன்றில் புனித நோன்பிருந்தபடியே விளையாடியமையும் குறிப்பிப்பிடத்தக்கது. அந்தப்படத்தையே கீழே காண்கிறீர்கள்


2 comments:

Powered by Blogger.