Header Ads



பஹ்ரைனில் அமைதியின்மையை, ஏற்படுத்தும் ஈரான் - ஷியா மதகுருவின் குடியுரிமை பறிப்பு


பஹ்ரைனில் ஷியா பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த, மிக முக்கிய மதகுரு ஒருவரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

தான் வகித்த பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஷேயிக் இசா குவாஸிம் மீது உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், மதக்குழுக்களிடையே அவர் மோதலைத் தூண்டியதாகவும், வெளிநாட்டு நலன்கள் என்று சொல்லப்பட்ட விஷயங்களை அவர் செய்ததாகவும் உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சுன்னி முஸ்லீம் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் ஆளும் நிர்வாகம், தங்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதாக ஷியா பிரிவினர் புகார் சொல்கிறார்கள்.

ஷியா சமூகத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஈரான் நாடு, பல ஆண்டுகளாக பஹ்ரைனில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.