Header Ads



இப்தார் நிகழ்வில் முஸ்லிம் மாணவர்களை புகழ்ந்த, ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர்

-Vtm Imrath-

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட, விசேட இப்தார் நிகழ்வொன்று நேற்று(10/06/2016) பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது!

உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரத்துங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவிலான முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத மாணவர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்!

அஷ்ஷெய்க் முனீர் முழப்பர் அவர்களின் நோன்பின் மகத்துவம் பற்றிய சிங்கள மொழியிலான சொற்பொழிவு சிங்கள மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன்,

நோன்பு தொடர்பாக தங்களுக்கு சிறந்ததொரு தெளிவு கிடைத்ததாகவும் கருத்துப் பரிமாறிக்கொண்டனர்!

பல்கலைக்கழக வளாகத்தினுல் மார்க்க கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றி மிகவும் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ளும் மாணவர் சமூகம் என்றால், அதில் முஸ்லிம் மாணவர்களுக்குத்தான் முதலிடம் என உபவேந்தர் தனதுரையில் சொல்லி பெருமிதமடைந்தார்!

மேலும் திட்டமிட்டபடி நிகழ்வு மிகவும் அமைதியாகவும் அதன் பெறுமானங்களை பேணும் வகையிலும் நடைபெற்றமையில் மகிழ்ச்சி!
 
 

8 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  2. வேற்று மத மாணவர்களையும், விரிவுரையாளர்களையும், உப வேந்தரையும் அழைத்து நோன்பு திறக்கும் ஒரு முன்மாதிரியான இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஜெய புர முஸ்லிம் மஜ்லிசுக்கு எமது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. Masha Allah. Barakallahu feekum.

    ReplyDelete
  4. நிச்சயமாக முஸ்லிம் அல்லாதவர்களின் உள்ளத்தில் இஸ்லாமிய விதை விதைக்கப்பட்டிருக்கும். எதிர்காலத்தில் இன்சா அல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள இந்நிகழ்ச்சியும் காரணமாக அமையலாம்.

    ReplyDelete

Powered by Blogger.