"பசு மாடும், எருமை மாடும்" தேசிய அரசாங்கம் குறித்து மகிந்த சீற்றம்
தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் பசு மாடும் எருமை மாடும் ஒன்றினைந்து முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்ததானது வெறுமனே கடன் சுமையினை காட்டி மக்களை ஏமாற்றுகின்ற இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று காணப்படுவது நல்லாட்சியா என்பதனை அனைத்து மக்களிடமும் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொலனறுவை மெதிரிகிரிய பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற பௌத்த பீட அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னால் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உருப்பினருமாகிய மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment