Header Ads



திலகரத்ன டில்சான் விளையாடமலிருக்க, இதுவா காரணம்..?


திலகரத்ன டில்சான் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டிகளில் விளையாடமைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி கமகேவுடன் இடம்பெற்றுள்ள கருத்து முரண்பாடுகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இங்கிலாந்துக்கு செல்வதற்கு முதல் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவருக்குமிடையிலான, வாய்த்தர்க்கமானது அரசியல் விடயங்கள் வரை சென்றதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை 'எனக்கு விருப்பமான வகையில் விளையாட முடியாதவர்கள் மற்றவர்களுக்கு வாய்ப்பளித்து விட்டு செல்லாம்' என அமைச்சர் தயாசிறி கூறிய வேளை 'தாங்கள் கூறுவது போல் எனக்கு விளையாட முடியாது' என்று கூறிவிட்டு டில்சான் அங்கிருந்து சென்றுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. The politics involved long long time in the sports...specially in the cricket....
    For the sake of country, the SLC must be seperated from the made of politics/ politicians

    ReplyDelete

Powered by Blogger.