விழியோரம் கசியும், ஒரு துளி (படிப்பினைக்குரிய சம்பவம்)
-TM முபாரிஸ் ரஷாதி-
அன்பு என்ற வார்த்தைக்கு அகராதியாகத் திகழ்ந்த கணவன் வேலை முடித்துவிட்டு களைப்புடன் வீடு திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மனைவியிடம் மஃரிப் வேளையில் கேட்கிறார் அஸர் தொழுது விட்டாயா ? அதற்கு அவள் இல்லை தவறிவிட்டது என்றாள் அப்படியா ? எனக்கேட்டு விட்டு அவசரமாக அஸரையும் மஃரிபையும் தொழுது கொள் என்றார் உடனே அவள் அவ்வாறு செய்து கொண்டாள்
மறு நாள் கணவன் வேலை நிமிர்த்தம் வெளியூருக்குச் செல்ல நேரிட்டது
மறு நாள் கணவன் வேலை நிமிர்த்தம் வெளியூருக்குச் செல்ல நேரிட்டது
அன்பான கணவன் எப்பொழுது மனைவியைப் பிரிந்து எங்கு சென்றாலும் சென்ற உடனே தொலை பேசியில் தகவல் சொல்லி விடுவாரே
இன்று என்ன ஆனது இன்னும் கணவனிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லையே பதறினாள் அவளும் கணவனின் தொலை பேசி இலக்கத்தை
அழுத்துகிறாள் போன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது
அழுது புலம்புகிறாள் பலரிடமும் கதறிக்கொண்டே இந்த செய்தியைச் சொல்லுகிறாள் செய்வதறியாது திகைத்துப் போகிறாள்
இப்படியே நான்கு மணித்தியாலங்கள் கழிகிறது
திடீரென தொலை பேசி அழைப்பொன்று அவளுக்கு வருகிறது யார் என்கிறாள் ?
உடனே கணவன் சிரித்த வண்ணம் நான் தான் என்கிறார் உடனே அவள் எப்பொழுது போய் சேர்ந்தீர்கள் என்றாள் அவர் நான் இங்கு வந்து 4 மணித்தியாலங்கள் ஆகிவிட்டன என்றார் உடனே அவள் கோபம் எல்லை மீறி வாய்க்கு வந்த படி திட்டலானாள்
என்னோடு அன்பில்லையா ? நீயெல்லால் ஒரு நல்ல கணவனா ? என்றெல்லாம் திட்டுகிறாள்
பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த
கணவன் நான் நான்கு மணித்தியாலங்கள் தாமதமாகி வந்தடைந்த தகவல் சொன்னதற்கு நீ இவ்வளவு ஆத்திரப் படுகிறாயே
உன்னை படைத்து உனக்கு உணவளித்து போஷித்து பாதுகாத்து உன் தாயை விடவும் என்னை விடவும் உன்னை அதிகம் நேசிக்கும் கருணையுள்ள இறைவனை அஸர் நேரத்தில் துதிக்க வேண்டிய நீ நான்கு மணித்தியாலங்கள் தாமதித்து மஃரிப் வேளையில் தொழுது துதித்தாயே அவன் உன் மீது எவ்வளவு கோபப்பட்டிருப்பான்
என்றார் உடன் தேம்பித் தேம்பி அழுத மனைவி தனது வாழ் நாளில் என்ன வேலையாயினும் அது தொழுகைக்குப் பிறகு தான் என்ற தீர்மானத்தோடு
அன்பான கணவனை வார்த்தைகளால்
ஆரத்தழுவினாள்
சில விடயங்களை பல மணி நேரங்கள்
உரை நிகழ்த்தி புரியவைப்பதை விட
வாழ்வில் ஏற்படும் ஒரு சின்ன சந்தர்ப்ப சூழ் நிலையை வைத்து இலகுவாகவும்
வாழ்வில் என்றும் அழியாதவாறும் உணர்த்திடலாம்
நல்ல கணவனா நீங்கள்? உங்கள் மனைவி உங்களை நேசிக்கிறாளா ?
சுவனத்திலும் அவளோடுதான் வாழவேண்டும என்று எண்ணுகிறீர்களா?
நீங்கள் மாறுங்கள் அவளையும் மாற்றுங்கள் அழகிய பயிற்றுவிப்புத் தான்
சிறந்த உருவாக்கத்தின் ஆரம்பம்
மூலம் - அரபு இணையதளம்

I like this news. Very important news.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ்
ReplyDeletemasha allah! this is best way of dhahwa...
ReplyDelete