Header Ads



பொதுபல சேனாவின் உற்ற நண்பர்களுடன், மைத்திரி கலந்துரையாடிய விடயங்கள்..!

“நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் மாற்று மதத்தினர் பலாத்காரமாக சிலை வைத்துள்ள விவகாரம் தொடர்பாகவும் மட்டகளப்பு காசி லிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று தொல்பொருள் சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்துக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியை தெளிவூட்டும் அவசர சந்திப்பொன்று இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதிக்கு அருண்காந்தால் புனித பகவத் கீதை நூல் ஒன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இங்கு இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் கூறுகையில்,

“நாம் என்றுமே இந்து மதம் விதந்துரைத்துள்ள அஹிம்சை கொள்கைகளையே கடைபிடித்து வருகின்றோம். இலங்கையில் மட்டுமல்ல உலகில் எங்குமே மாற்று மதத்தவரின் புனித இடங்களில் அநாவசியமாக எமது மதச் சின்னங்களை நிறுவிய வரலாறு கிடையாது. அப்படி இருக்கையில் எமது அஹிம்சை கொள்கையை பலவீனமாக கருதி பல்வேறு மதப்பிரிவினர் எமது ஆலயங்களுக்குச் சொந்தமான இடங்களைக் கைப்பற்றுவது மட்டுமல்லாது அவ்விடங்களில் அநாவசியமாக சிலைகளையும் நிறுவி வருகின்றனர்.

ஏன் அஹிம்சையை மதிக்கின்ற, பின்பற்றுகின்ற எங்கள் மக்களுக்கு மட்டும் இவ்வாறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றது? நாம் இந்த நாட்டில் சமய நல்லிணக்கத்தை வேண்டுகின்றவர்கள். அதனால் தான் பௌத்த இந்து மாநாடுகளை நடாத்தி வருகின்றோம். இதன் மூலம்  பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து வருகின்றது.

எனினும், எங்களால் இவ்விரண்டு பிரச்சினைகளையும் தீர்க்க முடியாததற்கு காரணம் இவ்விரண்டு பிரச்சினைகளிலுமே அரசியல்வாதிகள் பின்புலமாக இருந்து அவரவர் மக்களை பிழையாக வழிநடாத்தி வருகின்றனர்.

எனவே, இந்துக்களின் ஆத்மாவாக விளங்கும் திருக்கேதீஸ்வர வளாகத்தினை காப்பாற்றித் தாருங்கள்” என்றார்.

இதனை  செவிமடுத்த ஜனாதிபதி  தமது பதிலுரையில் கூறியதாவது,“

“நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன்.

இந்து பௌத்த சமயங்களில் சொல்லப்படுகின்ற மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்காத மனிதத்துவத்தை, பசுவதையில் ஈடுபடாமை போன்ற விடயங்களில் நீங்கள் உறுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனினும், மற்றைய மதத்தினர் அவரவர் மதங்களில் சொல்லப்பட்டிருப்பதை அவர்கள் பின்பற்றுவதை நாம் எதிர்க்கத் தேவையில்லை.

நான் உங்களுடைய புனித பிரதேசமான திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் இடம்பெற்றுள்ள பிரச்சினை தொடர்பாகவும், மட்டகளப்பு காசிலிங்கேஸ்வரர் ஆலய தொல்பொருள் பிரதேசம் தொடர்பாகவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறுவதற்காகவும் நீங்கள் குறிப்பிட்ட மூன்று அமைச்சர்களையும் உடனடியாக அழைத்துப் பேசுவேன்.

நீங்கள் என் மீதும் எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்கலாம். நீங்கள் எனக்கு வழங்கிய பகவத்கீதையை நான் ஒரு உயர்ந்த பொக்கிஷமாகவும் தினம் வாசிக்கும்படியும் பத்திரப்படுத்துவேன்” என்றார்.

இந்தச் சந்திப்பில் இந்து சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

 இந்து சம்மேளனத்திற்கும் பொதுபல சேனாக்கும் மிகநெருங்கிய தொடர்பு காணப்படுவதும் இவ்விரு அமைப்புக்களும் இணைந்து செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது.

13 comments:

  1. Indu.mathamum.buddust.mathamu.ontruthan.buththarum.indu.maththaththai.sernththavarakal.srilankavil.indu.maththathavarkal.vera.maththaththavarkalukku.aniyayam.seithathu.kidathu.vera.mththaththinarai.mathithu.natakkinrarkal.anal.vettru.maththathinar.emathu.indu.alayankalil.ulla.silaikalai.udaithu.erukkirarkal.kurippittu.sollponaal.kalmunai.tharavai.pillyar.kovil.athukku.aduththu.sammanthurai.amman.kovil.enthamathiri.vidayankal.kurippaka.nallamillai.manithanai.manithan.maththithal.pothu

    ReplyDelete
    Replies
    1. இதையெல்லாம் செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போடுவது RSS தீவிரவாதிகளின் வேலை. அந்த RSS நாய்களின் அடிவருடிகளான இந்த ஹிந்து சம்மேளம் ஏன் இப்படி செய்து விட்டு முஸ்லிம்கள் மேல் பழி போட கூடாது ?

      Delete
  2. இந்த அஹிம்சாவாதியை கொஞ்சம் பேச்ச்சொல்லுங்க இவரு நல்லூர் கந்தசாமி ஆலயத்தைப்பற்றி முழுப்பூசனிக்காயையும் சோற்றில் மறைக்கிறார்,
    நல்லூர் முழுதும் முஸ்லிம்களின் இடம் 1990 களில் புலிப்பயங்கரவாதிகளால் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பால் முஸ்லிம்களின் சொத்து உயிர், உடைமைகள், தொழில் வர்த்தகம் ,கல்வி எல்லாவற்றையும் சூறையாடியதுபோன்று முன்னர் போர்த்துக்கேய களவானிகளுடன் கைகோர்த்து முஸ்லிம்களை ந்லூரை விட்டு விரட்டியமையும் அஹிம்சையா?

    ReplyDelete
  3. இந்த rss அடிவருடி அஹிம்ஸாவாதியா. இவன் முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனை முகநூல் பக்கங்களை உருவாக்கி வன்மத்தை கக்கி கொண்டிருக்கின்றான் என்பதை முதுகெலும்புள்ள எந்த முஸ்லிம் அரசியல்வாதியாவது ஜனாதிபதியிடம் முறையிட தெம்பு உள்ளதா? பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் இந்த நயவஞ்சகன் முகத்திரையை மக்களுக்கு பகிரங்கபடுத்த போவது யார்??

    ReplyDelete
  4. Sritharan new kathaikkathe puli enke avanuhal Enna muslimkala avanuhal saitha aniyayaththai bidavaa

    ReplyDelete
  5. Ulakaththukku.therium.yar.entha.mathaththavan.payamkaravathi.enru.ninkathanda.mulu.pusanikkava
    Sottukkula.maraikkintrikal.ninka.muthalala.matta.mathaththavanai.maththu.natakkavendum

    ReplyDelete
  6. # Raskan. ..wakeup boy ...see the new reality :-)

    ReplyDelete
    Replies
    1. Hahahah...finally you read my messages. First you grow up Darling...After a 3 decades of war, you still want to retain problems with communities. I know that you seek publicity by posting comments about Muslims. Remember you are not Trump and this is not America. Hahahaha...

      Delete
  7. அடேய் ஹிந்துத்துவ தீவிரவாதிகளே எங்களை தீவிரவாதிகளாக காட்டி சிங்களவர்களை முட்டாள் ஆக்க முடியும் என்று கனவு காணாதீர். இலங்கை வரலாற்றில் உண்மையான தீவிரவாதிகள் யாரென்று சிங்களவர்களுக்கு தெரியும். அவர்கள் காரியம் முடியும்வரை உங்களை கையில் வைத்திருந்தாலும். நாட்டிற்குள் இந்திய ஆதிக்கம் பெருகும்போது உங்கள் கோவணத்தை உருவி அடிப்பார்கள். என்றுமே பொது பல சேனா போன்ற சிறு தீவிர கடும்போக்குவாதிகள் வேண்டுமென்றால் உங்களை கறிவேப்பிள்ளையாக பயன்படுத்திக்கொள்ளலாம் அறிவுள்ள சிங்களவர்களுக்கு என்றுமே நீங்களும் உங்கள் உண்மை முகமும் எது என்பது தெரியும்.

    ReplyDelete
  8. Gowri, Do you still remain with the same mind you had when LTTE were alive? Sri lanka will never get real peace and reconciliation until people like you still exist. Try to be a real human being who loves the human and the country. What a nasty mind you have got...che...

    ReplyDelete
  9. @ Raskan Ahmed! Well said bro! Betrayers... They forget that It's in their blood. " Karuna" is the perfect example for Gowri.

    ReplyDelete
  10. Yeah bro VOF...Gowry is a perfect recapture of Karuna.

    ReplyDelete

Powered by Blogger.