Header Ads



முகமது அலியின் மரணம் - அரசியல் விவாதத்தை தூண்டியுள்ளது

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மரணம் அமெரிக்காவில் ஒரு அரசியல் விவாதத்தை தூண்டியுள்ளது.

முகமது அலி மரணம் குறித்து விடுத்துள்ள தனது அஞ்சலி குறிப்பில், ஒரு உண்மையான மற்றும் மகத்தான சாம்பியனான முகமது அலியின் இழப்பை அனைவரும் உணர்வர் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் வருகை புரிவதை தடை செய்ய வேண்டுமென்று, கடந்த வருடம் டிரம்ப் விடுத்த அழைப்பை முகமது அலி கண்டித்திருந்தார்.

டிரம்ப் போலி தனத்தை கடைப்பிடிப்பதாக ஜனநாயக கட்சி வேட்பாளரான செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களில் முன்னணியில் உள்ள ஹில்லாரி கிளிண்டன், டிரம்பை அவரது வார்த்தைகளையும், செயல்களையும் கொண்டே எடை போட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமையன்று ,கென்டகி மாநிலத்திலுள்ள அவரது சொந்த சொந்த ஊரான லூயிஸ்வில்லில் முகமது அலியின் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

குறிப்பிடப்படாத இயற்கை காரணங்களால் குருதியில் நச்சுத் தன்மை உண்டானதால் முகமது அலி இறந்து விட்டதாக ஒரு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.