Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட, மைத்திரியிடம் சுதந்திரக் கட்சி கோரிக்கை

எதிர்வரும் 2020ம் ஆண்டிலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் நிறுத்தக்கூடிய பொருத்தமான வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளைப் போன்று தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும், மீளவும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.