Header Ads



ஜனாதிபதி + பிரதமர் பங்கேற்ற இப்தார் நிகழ்வில், நல்லிணக்கத்திற்காக துஆ பிரார்த்தனை படங்கள்)


புனித ரமழானில் முஸ்லிம்களின் நோன்பு துறக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் இன்று (28) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. 

முஸ்லிம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் பெருந்தொகையானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் நாட்டில் சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக இதன் போது துஆ பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது. 

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சகல இனத்தவர்களும் சமாதானமாகவும் நம்பிக்கையுடனும் வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டுமெனக் குறிப்பிட்டார். 

நாட்டின் அனைத்து இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி ஒற்றுமையாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் செயற்படும் இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் போது இவ்வாறான வைபவங்கள் அனைவருடனும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்கப்படுவதன் முக்கியத்துவத்தினை ஜனாதிபதி அவர்கள் இதன் போது வலியுறுத்தினார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016-06-28


No comments

Powered by Blogger.