ரணிலின் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் பற்றிய விபரங்களை அறிக்கையாக வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் சொத்துக்களை கொள்ளையிட்ட மற்றும் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், சபைகளின் உயர் அதிகாரிகளின் பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் நேற்று உரிய தரப்புக்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மூன்று அமைச்சுக்கள் மற்றும் 16 அரச நிறுவனங்களிலும் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்தும் அந்தந்த நிறுவனங்களில் கடமையாற்றி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாராக கடமையாற்றிய காலத்தில் அந்த நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டு தொடர்ந்தும் உயர் பதவிகளை வகித்து வரும் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த அதிகாரிகள் பற்றிய விபரங்களை வழங்குமாறு பிரதமர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த அனைத்து விபரங்களையும் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்

Ranil has got up after one year of coma..........................
ReplyDeleteஅப்ப, ஊழல் புரிந்தோர் உள்ளே தள்ளப்படுவார்களோ? பொறுத்திருந்து பார்ப்போம்!
ReplyDeleteநாடகம்
ReplyDelete