Header Ads



யாழ் முஸ்லிம் கத்தார், அமைப்பின் ஒன்றுகூடல்


யாழ் முஸ்லிம் கத்தார் அமைப்பினால் முதன் முறையாக கத்தார் வாழ் யாழ் மக்களுக்கான ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு நேற்று  (17)ம் திகதி கத்தாரில் உள்ள இலங்கை உணவகமான லக்மீம நடைபெற்றது.

இந்நிகழ்வில் கத்தாரில் வேலைபுரியும் மற்றும் குடும்பமாக வாழுளும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சுமார் 200ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டர்கள்

இதன்போது இவ்வமைப்பை தொடர்ந்து வழி நடாத்த யாழ் மாவட்ட மக்களால் குழு அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் மாதாந்த சந்தா தொகையாக கத்தார் ரிறால் 20 மும்மொழியப்பட்டு உறுதிசெய்யப்பட்டது. மேலும் குழு அங்கத்தவர்களால் தலைவர் பொருளாளர் செயளாளர் தெரிவு செய்யப்பட்டு இவ்வமைப்பின் பதிவுகள் தொடர்பான நடவடிக்கைகளை தலைவரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

முஸாதிக் முஜீப்



No comments

Powered by Blogger.