குமார வெல்கமவை கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் - மஹிந்த
தொடங்கொடை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அந்த நிகழ்வை புறக்கணித்து விட்டு வந்துள்ளார்.
குறித்த பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் ஒன்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டதோடு, இதில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த கட்டடத்திற்கான நிதியை ஒதுக்கியது தான் எனவும், தன்னுடைய பெயர் குறித்த இடத்தில் காணப்படவில்லை என்றும் தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் அந்த இடத்திலிருந்து கோபமாக சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் குமார வெல்கமவின் இந்தச் செயலை பாராட்டியுள்ள மஹிந்த ராஜபக்ச குறித்த செயலுக்காக குமார வெல்கமவை கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பென்தர எல்பிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.
அத்துடன் எல்பிட்டிய தொகுதி அமைப்பாளரான கீதா குமாரசிங்கவை நீக்கியவர்கள் இரண்டு சிறியவர்களை தொகுதி அமைப்பாளராக தெரிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கீதாவை நாம் மீண்டும் எங்கள் அமைப்பின் எல்பிட்டிய தொகுதி அமைப்பாளராக தெரிவு செய்வதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment