Header Ads



ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட, நான் தயாரில்லை - மைத்திரி திட்டவட்டம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்காக கோட்டாபயவின் பெயரை முன்மொழிவதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

அமைச்சரின் இந்த கருத்து குறித்து தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

எதுஎவ்வாறு இருப்பினும், அவ்வாறானதொரு யோசனை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என, அக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

இதுஇவ்வாறு இருக்க, ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட தான் தயாரில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. 

நேற்று -06- இரவு அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், கட்சிகளுடன், இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட, அமைச்சர் ராஜித்த
சேனாரத்ன இந்த விடயத்தைக் கூறியுள்ளார்

No comments

Powered by Blogger.