இஸ்லாமிய சட்டங்களை விமர்சிக்க, யாருக்கும் அருகதை கிடையாது - சவூதி எச்சரிக்கை
எங்கள் நாட்டு சட்டத்தை பற்றி விமர்சிக்க யாருக்கும் அருகதையும் கிடையாது என்று அமெரிக்காவில் நடைபெற்ற சட்ட நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் சவூதி அரேபியாவுக்கான நீதி அமைச்சர் 'முஹம்மது அல் ஈசா' எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்கள் நாட்டின் சட்டதிட்டங்கள் இறைமறையான திருக்குர்ஆனுக்கு உட்பட்டதாக இருக்கின்றது. இறைவனால் இவ்வுலக மக்களுக்கு அருளப்பட்ட சட்டங்களையே நாங்கள் எங்கள் நாட்டில் கடைப்பிடிக்கின்றோம் என கூறியுள்ளார். முஹம்மத் அல் ஈஸா மேலும் கூறுகையில்,
எமது நாட்டின் சட்டங்களை இழுவுபடுத்தியும், மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட சட்டங்களை எமது நாடு கடைப்பிடிப்பதாகவும் உலக ஊடகங்களும், மனித உரிமை அமைப்புக்களும் தவறாக எங்களை விமர்சித்து வருகின்றனர்.
இதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆளுமைமிக்க ஒரு நல்ல மனித
சமுதாயத்தைக் கட்டிக்காக்க திருக்குர்ஆனின் சட்டங்கள் இவ்வுலகிற்கு இன்றியமையாதவை. இஸ்லாம் பற்றியும், திருக்குர்ஆன் பற்றியும் அறியாத பல மேற்கத்தியர்கள் இஸ்லாம் மீதுள்ள பொறாமையில், சவுதி அரேபியாவின்
சட்டங்களை மாத்திரம் எதிர்த்து வருகின்றனர். விமர்சித்தும் வருகின்றனர்.
எங்களது சட்டங்கள் எப்போதும் மனித உரிமைகளுக்கு எதிரானது அல்ல. சட்டத்திற்கு அமைய குற்றவாளிகளின் தலையைத் துண்டிப்பதையும், கையைத்துண்டிப்பதையும் சவுதி நிறுத்த வேண்டும். இதற்கு மாறாக வேறு சட்டங்களை ஏற்படுத்துங்கள் என எங்களை பலர் வற்புறுத்துகின்றனர். ஆனால், இச்சட்டங்களை, தண்டனைகளை எங்களால் மாற்ற முடியாது.
ஏனெனில் குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது. தலைகளை துண்டிப்பதோ, கைகளை துண்டிப்பதோ, எங்களது சுய லாபத்திற்கு அல்ல. சந்தேகத்திற்கிடமான குற்றவாளிகள் எவருக்கும் நாங்கள்
இத்தண்டனைகளை வழங்குவதில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே இறைவனின் பெயரால் இத்தண்டணை வழங்கப்படுகிறது.
கடந்த 1400 வருடங்களுக்கும் மேலாக இஸ்லாம் இவ்வுலகில் ஆணித்தரமாக காலூன்றி இருக்கின்றது. இருந்தும் வருகிறது. இஸ்லாத்தில் பொய்களும், மனித உரிமைகளுக்கு எதிரான சட்டங்களும் இருந்தால் இஸ்லாம் இவ்வுலகில் எப்போதே அழிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் பல மில்லியன் கணக்கான மக்கள் இன்றுவரை இஸ்லாத்தில் இணைகின்றனர். இவர்கள் எவரும் உலக மனித உரிமைச் சட்டங்களைப் பின்பற்றி வரவில்லை. மாறாக அல் குர்ஆனைப் படித்து, விவாதித்து,ஆய்வு செய்தே இஸ்லாத்துக்குள் நுழைகின்றனர்.
எனவே இஸ்லாம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் சவுதி அரேபியாவின் சட்டங்களிலும், எங்கள் இறைமைகளையும் விமர்சிப்பதை இத்துடன் உலகம் நிறுத்த வேண்டும் என சவூதி அரேபியாவின் நீதி அமைச்சர் அல் ஈஸா வாஷிங்டனில் இடம்பெற்ற கூட்டமொன்றில் சவூதி அரேபியாவின் சட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உரையாற்றினார்.

Mashalah,
ReplyDeleteWith respect Law he was right. If Islam is a comprehehensive system of governance, then How can he justify kings family robbing most of the wealth which belong to the public, the monarchy ie system of governance Is it Islamic? This is selective implementation of Islamic principles for personal benefit!
ReplyDeleteWell said. Allahu Akbar.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ். சரியான பதில்.
ReplyDelete@PEACE.....do not mix your personal minded openions or remakrs in to his point of speach....Hope you be in limit...
ReplyDeleteIf you have doubt about their personal and king system rule, then you can ask them directly or you can discuss those subject seperately...
Please do not mix apple & orange
சவுதியில் இருக்கும் அமெரிக்க ஐரோப்பிய பிரஜைகளுக்கு உடன்படிக்கை மூலம் சட்டத்தில் விலக்கு அளித்துவிட்டு , அமெரிக்காவில் வெறும் வாய் வீராயப்பு பேசி நாட்டு மக்களை ஏமாற்றி அரசாட்சியை தக்க வைக்க இன்னமும் பேசுவார்கள.
DeleteProfert Mohammed not continue the government with his children and relation he give correct person now the king playing the muslim community the king are buypassing the saria and islam
ReplyDeleteAllahu Akbar
ReplyDeletemasah allah
ReplyDeleteகட்டுரை இஸ்லாமிய சட்டம் பற்றி பேசுகின்ற போது பின்னூட்டங்கள் அரச வம்சத்தை சுற்றியே சுழல்கிறது.
ReplyDeleteயாரோ ஊட்டி விட்டது இங்கு யாரோ வாந்தியெடுக்கிறார்..
மனித குலத்திற்கு தகுந்ந சட்டங்கள் இஸ்லாத்தில் மட்டுமே கற்பிக்கப்பட்டிருக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகளிலும் மேற்குலக நாடுகளிலும் இடம்பெறும் குற்றங்களின் விகிதாசாரங்களை ஒப்பிடுகின்ற போது எது சிறந்தது என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
ReplyDeleteWell said @ Sangathi!!! @ Peace you may have point when it comes to Europeans and American passport holders get extra favour in Saudi. It has nothing to do with Mohamed Al Esa's comment.
ReplyDeleteAs Muslims we must be proud of him. As you know that not many Saudi's will be shrude like that when it comes to Giving statements in America or about America.
Ihwaanees and Jamaats of Hawa always negative thinkers regarding KSA.
ReplyDeleteBut still they could not establish a so called islamic caliphat which they give preference over TAWHEED and SUNNAH.
Ya Allah Guide them.. if not protect the people from this evil thinking.
Thawheed or salfi group try to sustain the king in the seat continuously the king are giving benefits that people that'sy they are giving positive comments
ReplyDelete