இம்ரான் கானுக்கு எதிராக, பிடிவாரண்ட் பிறப்பிப்பு
பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 1-தேதி, பாகிஸ்தான் டி.வி. தலைமையகத்தின்மீது முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியினரும், தாஹிருல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெக்ரீக் கட்சியினரும் தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் போலீஸ் தலைமையகத்தில் மூத்த போலீஸ் சூப்பிரண்டு அஸ்மத்துல்லா ஜூன்ஜோ மற்றும் 5 அதிகாரிகளை தாக்கினர்.
இதையடுத்து இம்ரான்கான், தாஹிருல் காதிரி உள்ளிட்டவர்கள் மீது பணியில் இருந்த அதிகாரியை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் பலமுறை நோட்டீசுகள் அனுப்பியும், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இதையடுத்து இம்ரான்கான், தாஹிருல் காதிரி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி சொஹைல் இக்ரம் ஜைதி இன்று அதிரடியாக உத்தரவிட்டார்.அத்துடன் அவர்களை கைது செய்து வாரண்டினை நிறைவேற்றுமாறு போலீஸ் துணை சூப்பிரண்டு இத்ரீஸ் ரத்தோருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment