"இராஜாங்க அமைச்சர்கள் நெருக்கடி" மைத்திரி - ரணில் நீண்டநேரம் பேச்சுவார்த்தை
அனைத்து இராஜாங்க அமைச்சர்களுக்கும் உரிய துறைகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு துறைகளையும், நிறுவனங்களையும் உரிய முறையில் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் இராஜாங்க அமைச்சர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனைக் கருத்திற் கொண்ட அரசாங்கம் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக துறைகளை அறிவிக்கத் தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தமக்கு தேவையான துறைகள் அது தொடர்பில் நிலவி வரும் பிணக்குகள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சரவை அமைச்சர்கள் துறைகளை வழங்கவில்லை என்பதனால் பதவிகளை இராஜினாமா செய்ய இராஜாங்க அமைச்சர்கள் முயற்சித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

When you have too many cooks, this is what you will face.
ReplyDelete