Header Ads



துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து இங்கிலாந்தில் பெண் எம்.பி. மரணம்

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியின் பேட்லி மற்றும் ஸ்பென் ஆகிய பகுதிகளின் எம்.பி.,யாக ஜோ காக்ஸ்(41).  இவர், தனது தொகுதிக்கு உள்பட்ட பிர்ஸ்டால் என்ற இடத்தில் நடந்துசென்றபோது, எதிரேவந்த நபரால் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் படுகாயம் அடைந்தார். இதேபோன்று, ஜோ காக்ஸ் உடன் சென்ற நபரும் தாக்குதலுக்கு ஆளானார்.

இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், ஜோ காக்ஸை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகளவு ரத்தம் வெளியேறியதால், அவர் ஆபத்தான கட்டத்தில் உயிருக்குப் போராடி வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார்.

ஜோ காக்ஸ் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய 52 வயதான அந்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கான காரணத்தை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.