Header Ads



மீண்டும் மஹிந்த வராமல் இருப்பதற்கு, நாங்கள் பக்குவமாக இருக்க வேண்டும் - ஹக்கீம்


நல்லாட்சியில் நாங்கள் முதலாவது கேட்ட கோரிக்கையானது, பாதுகாப்புப் பிரிவை வகித்திடாத சிவில் ஆளுநர் ஒருவர் தேவை என்பதுதான். நாங்கள் அதனைத் தற்போது கொண்டு வந்துள்ளேம். ஆனால் எமது ஆளுநரின் சுபாவம் மாறியதா? எமது முலமைச்சர் ஒரு இடத்தில் பக்குவம் தவறிவிட்டார் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, புல்மோட்டையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போதே (17) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், 

கடந்த மாதம் ஒரு வதந்தி வெளி வந்தது, பிரச்சினை வருவதெல்லாம் இராணுவ விடயமாகத்தான் உள்ளது. தவறியும் கொஞ்சம் கோபமாகப் பேசமுடியாத நிலை உள்ளது. தவறியும் பேசினால் நாடே அதிர்ந்து போகும் அளவிற்கு ஆர்ப்பாட்டம் வருகின்றது.

இது இந்த நாட்டிலுள்ள ஒரு சிக்கலான விடயம். அந்த நிகழ்வின் பின்னர் வழமையான பிரசித்தியை விட பல மடங்கு உலகமெல்லாம் தெரியும் அளவிற்கு இந்த முதலமைச்சர் பிரசித்தியடைந்து விட்டது மட்டுமல்லாது சற்று நாள் எல்லாக் காட்டுனிலும் வந்து அதன் கதாநாயகனாகவும் மாறியிருந்தார்.

அதன் சாதக பாதகங்களைப் பின்னர் கதைக்கலாம். அதுவல்ல பிரச்சினை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி வேறு தலையீடுகள் இல்லாமல் உள்ளதா? என்பதுதான், இது வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது.

இதில்தான் முஸ்லிம் காங்கிரஸ் தீவிரமாக அரசியலில் அடுத்தகட்ட நகர்வினை யோசிக்க கூடியதாக உள்ளது. நாங்கள் வகுக்கும் வியூகங்கள் சந்தர்ப்பவாத, தேர்தல் காலத்தில் செய்கின்ற வேளையாக இறுக்காது என்றார்.

நல்லாட்சியைக் கொண்டு வந்துமுடிந்தது, மீண்டும் மஹிந்த வராமல் இருப்பதற்கு நாங்கள் கொஞ்சம் பக்குவமாக இருக்க வேண்டும். ஆனால் கெடு பிடிமிக்க மேலாதிக்கவாதிகளின் பிடியிலிருந்து இந்த மண்ணிலே இருக்கின்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வரவேண்டும்.

இது இலகுவாக இந்த நல்லாட்சியில் இரவோடு இரவாக செய்யக்கூடியதொன்றல்ல. நடந்த பிரச்சினைகள் இவ்வளவு பூதாகரமாக வருவதற்கு, ஒரு சம்பவம் ஒரு சரித்திரமாகத்தான் வர வேண்டும். ஆனால் இது என்ன காரணம் என்று கேட்டால் அது இனவாதமல்லாது வேரொன்றல்ல என்று எல்லாருக்கும் புரிந்திருக்க வேண்டும்.

அது நடுநிலைவாதிகளாக சிந்திக்கின்ற எந்த இனத்தவரைச் சார்ந்தவராக இருந்தாலும் அது விளங்கும் .வடக்கிலுள்ள பிரச்சினைகளைப் போன்று கிழக்கிலும் நாங்கள்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றோம் என்று அண்மையில் நான் பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன்.

இது கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு என்று சொல்லி அதில் இருக்கின்ற சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெனீவாவில் இந்த அரசாங்கத்திற்கு கொடுக்கப்படுகின்ற அந்த பிரேரணையிலான உத்தரவு நடைமுறைப்படுத்துகின்றபோது இதற்கான முக்கிய இடம் புல்மோட்டைக்கு உள்ளது.

30 ஏக்கர் காணி பாதுகாப்புக்குத் தேவை என்று அடைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு இடம் தேவையா என்ற கேள்வியும் உள்ளது. இன்னும் 10 ஏக்கர்காணி விசேட அதிரடிப்படையினருக்கும் எடுக்கபடவுள்ளது. ஆனால் அடிக்கடி வலிகாமம் வடக்கில் எப்போதும் காணிப் பிரச்சினைகள் கதைக்கப்படுகின்றது போல் புல்மோட்டையிலிருந்து பொத்துவில் வரை முழு கிழக்கு மாகாணத்திலும் அதே மாதிரியான காணிப்பிரச்சினை உள்ளது.

இங்கு உள்ள எல்லா இராணுவ முகாமிலும் தேவைக்கு மேலதிகமாக மக்களுடைய காணிகள் பயிற்ச் செய்கைக்காக வேலி அடைக்கப்பட்டு உட்புகுதல் தடை என போடப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சியில் என்றால் சகித்துக் கொண்டிருக்கலாம். இந்த ஆட்சியிலும் இது நடப்பதால் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார்கள். இதற்கான கேள்விகளுக்கு தலைமைகள் விடைகாண வேண்டும் என்கின்றனர் மக்கள்.

எல்லாவற்றுக்கும் பேரம் பேசும்அரசியல் சக்தி எங்களிடம் இருக்க வேண்டும். நாங்கள் ஒரு காலமும் வெற்றிலையுடன் போய் சரணடைய வில்லை. எங்கள் சொந்த சின்னத்திலே கேட்பது இல்லை யென்றால் எதிர்கட்சியிலே ஐ.தே.க உடன் சேர்ந்து கேட்பது என்பதிலேதான் எங்களுடைய அனுகுமுறை இருந்தது.

அதற்கு மேலாக வேறு வியுகங்களையும் நாங்கள் போடலாம் .ஜனாதிபதியும் பிரதமரும் இந்த நல்லாட்சியில் இந்த புதிய தேசிய ஆட்சியில் உளப்பூர்வமாக சிலதை செய்ய வேண்டும். இந்த ஆட்சியில் அமர்த்தியவர்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினர்கள் என்ற பாரிய நல்லெண்ணம் இந்த ஜனாதிபதியிடம் இருக்கின்றது.

இதன் வெளிப்பாடாக வடக்கின் குடியேற்றம் சம்பந்தமான விடயங்களையும்காணி விடுவிப்பு பற்றிய விடயங்களையும் ஜனாதிபதி அவர் நேரடியாக தலையிட்டு தன்னுடைய தலைமையில் ஆளணி அமைத்து அவர் செயற்பட்டு வருகின்றார்.

அவருடைய கவனம் இப்போதுகிழக்கு மாகாணம் மீது உள்ளது. இங்கும் தனியார் காணிகள் எல். டி. ஓ. அனுமதி உள்ள காணிகள் மாறி காலத்தில் சேனை செய்கின்ற காணிகள் யுத்தம் முடிவடைந்து நல்லிணக்கம் வந்தும் இன்னும் இல்லையென்றால் அது சம்பந்தமாக ஒரு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாண காணி ஆணையார் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் முதலமைச்சர் கூடி முதலில் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். பாதுகாப்பு அமைச்சோடு சேர்ந்து நாங்கள் ஒரு பேச்சுவார்த்தை செய்ய வேண்டும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் அழைத்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசி புல்மோட்டையில் பல இடங்களிலுமுள்ள பிரச்சினைகளை சிக்கல்களை தீர்ப்பதற்கு விரைவாக நாங்கள் ஒரு கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும்.

பாதுகாப்புக்கு இடையூறாக நாங்கள் ஒருபோதும் இருக்க விரும்பவில்லை. உக்கிரமானயுத்தம் இருந்த வேளையில் மிக நெருக்கடிக்குள் மாட்டிய மக்கள் இந்த புல்மோட்டை மக்கள் . ஒரு பக்கம் விடுதலைப்புலி மறு பக்கம் இராணுவம். அந்தக் காலங்களில் நானும் பலமுறை இந்த புல்மோட்டைக்குப் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் ஹெலிகப்டர்மூலம் வந்துள்ளேன்.

அந்தக் காலத்தில் செய்ய முடிந்ததை இந்தக் காலத்தில் செய்யமுடியாத ஒரு நிலவரம் வரும் அளவுக்கு கெடுபிடி நிலவரம் இருக்க முடியாது. இதற்கு நல்ல அணுகு முறையில் தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு அரசியற் பிரமுகர்களும் மேடையிலுள்ள அனைவவரும் இணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்தார்.

மேலும் இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், சட்டத்தரணி.ஜே.எம்.லாஹிர் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் நிதாவுல் ஹைர் நிறுவனத்தின் மாணிய உதவி வழங்குகின்ற பைஸல்விலாஹி, பீஸ் நிறுவனத்தின் திட்டப் பொறுப்பாளர் நியாஸ், நீர் வழங்கள் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. மகிந்த வந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லை .. அதாஉல்லாஉம் இன்னும் பலரும் அமைச்சர்கள் தான் நீங்களும் ரிசாத் உம் தான் இல்லை.

    ReplyDelete
  2. HAKEEM OPENS MOUTH IN PULMODDAI.
    As the signs for the local government elections are emerging, the HYPOCRITIC and DECEPTIVE Muslim political leaders like SLMC Leader Rauf Hakeem has started to PROWL thickly populated Muslim rural villages like Pulmoddai to tell the long stories and mislead the INNOCENT Muslim voters to vote them to power. This deceptive so-called SLMC Leader campaigns under the SLMC Party banner, but contests under the UNP Elephant symbol. Wiping up communal and religious themes, these politicians finally do all they can to become elected by the people hoodwinking the poor "PAMARAMAKKAL", the Muslim voters. Let the Muslims (PAMARAMAKKAL) of PULMODDAI NOT get duped once again, Insha Allah. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations (excluding www.jaffanamuslim.com) in Sri Lanka and their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. WHY HAS NOT THIS unscrupulous UNDEMOCRATICALLY SELF ACCLAIMED SLMC LEADER NOT CALLED FOR A PRESIDENTIAL COMMISSION OR A HIGH LEVEL INQUIRY BY THE YAHAPALAN GOVERNMENT ON THE ALUTHGAMA and BERUWELA VIOLENCES/INCIDENCES UP TO NOW? It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. The Muslims of TRINCOMALEE DISTRICT, especially PULMODDAI are most capable of doing it and the YOUTH of KINNIYA and PULMODDAI can lead this cause, Insha Allah. Being someone who has very close family and political relationship with the KINNIYA and PULMODDAI (TRINCOMALEE DISTRICT) MAKKAL, I am sure that they can take this challenge forward, Insha Allah. KINNIYA/TRINCOMALEE DISTRICT has already produce a “CLEAN, HONEST and DILIGENT YOUNG POLITICIAN arising from a longstanding, respected philanthropic and strong political family to lead them, Alhamdulillah and I am sure the forces behind him will close the doors for the DEAD SLMC not to enter PULMODDAI or the district with deceptions, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP District Organizer - Trincomalee District and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.