இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம் - மகிந்த + கோத்தபாய பொறுப்பு
சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் ஏற்க வேண்டும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், சர்வதேச தரத்திற்கும் அனுபவத்திற்கும் அமைய ஆயுதங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிந்து 6 வருடங்கள் கழிந்திருந்த நிலையிலும் முகாமில் இருந்த ஆயுதங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனடிப்படையில், பொறுப்பை அவர்கள் புறந்தள்ளி உள்ளனர்.
எனினும் தற்போது ஆயுதங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஆயுதங்களை அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை வெறுமனே செய்து விட முடியாது. ஆயுதங்களை அப்புறப்படுத்த தீர்மானித்திருந்தால், அதற்கான ஆவணங்களை வெளியிட வேண்டும்.
இதற்கு முன்னர் 2009ம் ஆண்டு வவுனியாவில் ஆயுத கிடங்கு ஒன்று வெடித்தது. 2014ம் ஆண்டிலும் அப்படியான சம்பவம் நடந்தது. அந்த காலத்தில் ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிடவில்லை.
இந்த விடயம் தொடர்பில் அன்று உரிய நடவடிக்கைகளை எடுக்காதோர் தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

நீங்கள் ஆட்சிக்கு வந்து ஏன் அதை வேறு இடத்திற்கு மாற்றவில்லை?நீங்கள் இரு சாராரும் விடும் தவறுகளுக்கு நஷ்டஈடு கட்டுவது அப்பாவி பொதுமக்கள்தான் உங்களின் சம்பளத்திலோ அரச அதிகாரிகளின், சம்பளத்திலோ ஏனைய சொகுசுகளிலோ எந்தக் குறையும் ஏற்படாது அதுபோதாக்குறைக்கு மக்களிடம் இலஞ்சம் அரச சொத்து கொள்ளையடிப்பு என்று பலவழிகளில் பணம் சேர்க்கும் உங்களுக்கு எந்த கவலையும் கிடையாது (நிண்ட ஆட்டு பாலும் விழுந்த ஆட்டு இறைச்சியும் )
ReplyDelete