Header Ads



'சிறப்புக்குரிய ரமழான்' மாதத்தில் கைதிகளை விடுவித்த, கத்தார் மன்னருக்கு நன்றி - மோடி


கத்தார் நாட்டு சிறைகளில் இருந்து 23 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் 60 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வேலைசெய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அரசுமுறை பயணமாக கத்தார் நாட்டுக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள இந்திய தொழிலாளர்களின் நலன்களை நல்லமுறையில் பாதுகாக்குமாறு அந்நாட்டு மன்னரான ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானியிடம் வலியுறுத்தியிருந்தார். அதை மன்னரும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கத்தார் நாட்டு சிறைகளில் இருந்து 23 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ‘சிறப்புக்குரிய ரமலான் மாதத்தின் துவக்கத்தையொட்டி, கத்தார் அரசு 23 இந்திய கைதிளை விடுதலை செய்துள்ளது. அவர்கள் அனைவரும் விரைவில் தாய்நாடு திரும்புவார்கள். 

அவர்களை விடுதலை செய்த கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.