Header Ads



பெண்கள் வெளிநாடு செல்வதை, தடுத்துநிறுத்த முடியுமா - ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு


வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் வீட்டுப் பணிப்பெண்களின் ஆகக்குறைந்த வயதெல்லையை 22 ஆக குறைக்கும் யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

அமைச்சரவையில் நேற்று இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது ஜனாதிபதி இதனை நிராகரித்துள்ளார்.

தற்போது காணப்படும் 25 என்ற ஆகக் குறைந்த வயது எல்லையை 22 ஆக குறைப்பதற்கு அனுமதி வழங்குமாறு தலதா அதுகோரள அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார். எனினும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வயதெல்லையை குறைப்பதனால் இளம் யுவதிகள் அதிகளவில் வெளிநாட்டுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வதனை முடிந்தால் முற்று முழுதாக நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் சில அமைச்சர்களும் வலு சேர்த்துள்ளனர்.

அரசாங்கத்தின் நிலைப்பாடும் கொள்கையும் அதுவென்றால் அதனை ஏற்றுக் கொள்வதாக தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க ஜனாதிபதி அமைச்சரவை குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்தக் குழுவில் அமைச்சர் தலதா அதுகோரளவும் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வதனை முற்று முழுதாக தடுத்து நிறுத்த முடியுமா என ஆராயுமாறு ஜனாதிபதி அந்தக் குழுவினரிடம் கோரியுள்ளார்.

8 comments:

  1. Great move Mr Presidenthe. Please safeguard our mother and sister

    ReplyDelete
  2. பெண்களை முற்றாக தடைசெய்துவிட்டு அறபு நாடுகளுக்கு அனுப்புவதைப் போன்று ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்த்திரேலியா போள்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் இலகுவாக விசாக்களைப் பெற்று குறைந்த செலவில் ஆண்கள் மாத்திரம் போவதற்கான வாய்ப்புக்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். இதன்மூலம் அறபுநாட்டில் ஊதியம் பெறும் ஒருவரை விடவும் பலமடங்கு அதிகமான ஊதியத்தை மாத வருமானமாக ஒருவர் இன் நாடுகளில் பெறமுடியும். இவ்வாறு ஒப்பீட்டளவில் அதிக வருமானம் கிடைக்கும் நாடுகளை இனம்கண்டு தொழில் வாய்ப்புக்கான கேள்விகளை கண்டறிவதர்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அதிகளவு அந்நிய செலாவனியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

    ReplyDelete
  3. பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை உலமாக்கள் விபரீதங்களை தெளிவுபடுத்தி மார்க்க சொற்பொழிவுகள் நிகழ்த்தி தடுக்கவேண்டும்.பல பெண்கள் வெளிநாடு செல்ல அவர்களது கணவன்மார்களே அனுப்பிவைக்கின்றனர்.

    ReplyDelete
  4. ஒவ்வொருவருடைய குடும்ப நிலைவரத்தை அவரவர்கள் தான் அறிவார்கள்.

    ReplyDelete
  5. Everything must be done to stop house maid export INDUSTRY.
    President's request to consider this possibility must be
    welcomed and encouraged .People must be provided jobs in
    the local job market . Jobs must be created . Not only
    this , the trend of raising children for export must come
    to an end . Today's younger generation is doing higher
    studies with the intention of going abroad to settle down.
    No harm in it if only a small percentage has that dream .
    But the case is alarmingly the opposite ! One hundred
    percent or nearly so , want to migrate to the West ! This
    has now become an epidemic . The west is only selling
    their career education products and not Job opportunities.

    ReplyDelete
  6. முழுமையாக பெண்கள் வெளிநாடு போவதை நிறுத்த வேண்டும்.அப்போதுதான் இந்த நாட்டில் உள்ள ஆண்கள் புத்தி மதியோடு உழைத்து சம்பாரிப்பார்கள்.அத்தோடு முஸ்லிம்களாகிய நாம் இதில் ஊக்கிவிப்பதொடு,நம்மவர்கள் ஒருமுறைக்கு பல முறை உம்ம்ராவும் பல முறை ஹஜ்ஜும் செய்பவர்கள் ஏழைகளை கவனிப்பதில் ஆர்வம் காட்டினால் பெண்கள் வெளிநாடு போக வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
  7. Excellent report. ...

    but government depends on the income of foreign employment. ..
    what to do. ..

    ReplyDelete
  8. Jawfer

    Yes , true ! Islam doesn't ask you for repeat-Umra or Haj !
    If you want to do it , once is more than enough . DO NOT
    TRY TO FORCE ALLAH TO GRANT YOU JANNAH ! IT IS ALLAH'S
    DECISION , NO MATTER WHAT YOUR DEED IS ! SO , WHY WASTE
    YOUR WEALTH FOOLISHLY ? Open your eyes and spend your
    wealth on a worthy course . Allah says Muslims are
    intelligent , so , don't try to fool him . Many,in the
    the days of the prophet , born and bred in Mecca ,
    will be in Jahannam . Remember it !

    ReplyDelete

Powered by Blogger.