என்னை நீக்க, நசீரினால் முடியாது - ஒஸ்டின்
என்னை ஆளுனர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முதலமைச்சரினால் முடியாது என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
மாகாண ஆளுனர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கு, மாகாண முதலமச்சர் நசீட் அஹமட்டிற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.
என்னைப் பற்றி என்னைவிட அதிகாரம் குறைந்தவர்களினால் தீர்மானம் எடுக்க முடியாது.
ஆளுனர் பதவிக்கு மேல் அதிகாரம் படைத்த ஜனாதிபதியே இது குறித்து தீர்மானிக்க வேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் உண்டு.எனினும் குற்றச்சாட்டுக்களை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நேற்று முன்தினம் ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கிழக்கு மாகாண ஆளுனரின் நடவடிக்கைகளை முதலமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஆளுநர் அவர்களே,ஜனாதிபதிக்கு வாக்கும் அரசியல் வாதிகளின் கட்சிப்பலமும் வேண்டும் அது ஒவ்வொரு அரசியல் வாதிகளிடம் இருக்கிறது அந்த அரசியல் வாதிகள் மக்களின் காலில் மண்டியிட வேண்டும் அதனால் மக்களுக்காக அவர்கள் விடும் அறிக்கைகளை அரச தலைவரான ஜனாதிபதி செவி சாய்க்க வேண்டும் அப்படியானால் உங்களின் கதி என்னவாகும்.ஆளுநர் அவர்களே இந்த நாட்டின் உங்களைப்போன்ற அரசியல் வாதிகளின் மக்களின் தலையளுத்தை ஐம்பது சதத்தின் பென்சில் முனைதான் தீர்மானிக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகிறோம்.
ReplyDeleteதிரு. ஆளுனர் அவர்களே
ReplyDeleteபரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்புக்குக்கும் பனம்பழத்திலிருக்கும் மூடிக்கும் நிறையவே வித்தியாசங்களுள்ளன!