பாதிக்கப்பட்ட இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு, 9 இலட்சம் ரூபா செலுத்த பரிந்துரை
-ARA.Fareel-
கடந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஹஜ்ஜாஜிகள் சிலர் ஹஜ் முகவர்களுக்கு எதிராக செய்த முறைப்பாடுகளை விசாரித்த ஹஜ் விசாரணைக்குழு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு முகவர் நிலையம் ஒன்பது இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட ஹஜ்ஜாஜிகள் மூவருக்கு செலுத்த வேண்டுமென தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமினால் கடந்த வருட ஹஜ் முறைப்பாடுகளை விசாரிக்க மூவரடங்கிய குழுவொன்றினை நியமித்திருந்தார்.
இக்குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.டப்ள்யூ.ஏ.சலாம் தலைமை வகித்தார்.
நான்கு ஹஜ் முகவர் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நான்கு ஹஜ் முகவர்களில் ஒருவருக்கே ஹஜ் விசாரணைக்குழு மேற்குறிப்பிட்ட தீர்ப்பினை பரிந்துரை செய்துள்ளது. அவருக்கு எதிராக 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இம்முறைப்பாடுகளில் மூன்று முறைப்பாடுகளே நிரூபிக்கப்பட்டன.
அதற்கிணங்கவே முறைப்பாட்டாளர்களுக்கு 9 இலட்சம் ரூபா செலுத்த வேண்டுமென ஹஜ் விசாரணைக்குழு உத்தரவிட்டது.
இதேவேளை இவ்வருட ஹஜ் பயண முகவராக அவர் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனைய இரு ஹஜ் முகவர்களில் ஒருவர் அதிகமாக கட்டணம் அறவிட்டிருந்தாலும் அவர் ஹஜ் விசாரணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறவிட்ட கட்டணத்தை மீள ஒப்படைத்திருந்தார்.
அடுத்த ஹஜ் முகவருக்கு எதிராக முறைப்பாடு செய்தவர் விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment